திருச்சி போதை மறுவாழ்வு மையத்தில் தாக்கப்பட்டவர் உயிரிழப்பு: 7 பேர் கைது

திருச்சி மாவட்டம் அதவத்தூரில் பூட்டி ‘சீல்’ வைக்கப்பட்டுள்ள போதை மறுவாழ்வு மையம்.

திருச்சி மாவட்டம் அதவத்தூரில் பூட்டி ‘சீல்’ வைக்கப்பட்டுள்ள போதை மறுவாழ்வு மையம்.

Updated on
1 min read

திருச்சி: ​போதை மறு​வாழ்வு மையத்​தில் தாக்​கப்​பட்​ட​வர் மருத்​து​வ​மனை​யில் உயி​ரிழந்​தார். இதையடுத்​து, மறு​வாழ்வு மைய நிர்​வாக இயக்​குநர் உள்​ளிட்ட 7 பேர் கைது செய்​யப்​பட்​டனர்.

திரு​வாரூர் மாவட்​டம் வடு​வூர் தெற்கு வன்​னியர் தெரு​வைச் சேர்ந்​தவர் முத்​துகு​மார்​(50). இவர் சிங்​கப்​பூரில் பொறி​யியல் நிறு​வனம் நடத்தி வரு​கிறார். இவரது சகோ​தர​ரான விஜய கு​மார்​(48) மது​வுக்கு அடிமை​யான​தால், அவரை திருச்சி மாவட்​டம் அதவத்​தூர் பகு​தி​யில் உள்ள ஜெய்த்ரா அறக்​கட்​டளை குடி மற்​றும் போதை மறு​வாழ்வு மையத்​தில் கடந்த 8-ம் தேதி சேர்த்​தனர்.

அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்​கப்​பட்டு வந்​தது. இந்நிலை​யில், உடல்​நிலை சரி​யில்​லாத​தால் விஜயகு​மாரை திருச்சி அரசு மருத்​து​வ​மனை​யில் சேர்த்​துள்​ள​தாக அவரது சகோ​தரர் முத்​துகு​மாரிடம், போதை மறு​வாழ்வு மைய நிர்​வாக இயக்​குநர் மணி​கண்​டன் கடந்த 10-ம் தேதி தெரி​வித்​துள்​ளார்.

இதையடுத்​து, முத்​துகு​மார் அரசு மருத்​து​வ​மனைக்கு சென்று பார்த்​த​போது, விஜயகு​மாரின் உடலில் பல்​வேறு இடங்​களில் காயங்​கள் இருப்​பது தெரிய​வந்​தது. இதுகுறித்து முத்​துகு​மார் அளித்த புகாரின்​பேரில் சோமரசம்​பேட்டை போலீ​ஸார் வழக்​குப் பதிவு செய்து விசா​ரணை நடத்​தினர்.

மைய நிர்​வாக இயக்​குந​ரான உறையூர் பாண்​டமங்​கலம் த.மணி​கண்​டன்​(50), நம்​பர் 1 டோல்​கேட்​டைச் சேர்ந்த வார்​டன் சீ.மணி​மாறன்​(29), பணி​யாளர்​கள் அதவத்​தூர் மு.பெரிய​சாமி(34), லால்​குடி ம.கிருஷ்ண​மூர்த்​தி(30), அப்​பணநல்​லூர் ப.சூர்​யபிர​காஷ் (28), தஞ்​சாவூர் மாவட்​டம் பட்​டுக்​கோட்டை செ.அறி​வுமணி(45), திரு​வை​யாறு ம.அபிஷேக்​(27) ஆகியோர் சேர்ந்து விஜயகு​மாரை தாக்​கியது தெரிய​வந்​தது.

இந்​நிலை​யில், விஜயகு​மார் சிகிச்சை பலனின்றி நேற்று முன்​தினம் உயி​ரிழந்​தார். இதையடுத்​து, மறு​வாழ்வு மைய இயக்​குநர் மணி​கண்​டன் உள்​ளிட்ட 7 பேரைக் கைது செய்த போலீ​ஸார், நீதி​மன்​றத்​தில் ஆஜர்​படுத்​தி, அவர்​களை சிறை​யில் அடைத்​தனர்.

மேலும், ஸ்ரீரங்​கம் வட்​டாட்​சி​யர் செல்​வகணேஷ், ஜீயபுரம் டிஎஸ்பி கதிர​வன் ஆகியோர் விசா​ரணை நடத்​தி, போதை மறு​வாழ்வு மையத்தை பூட்டி சீல் வைத்​தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த 24 பேர், திருச்சி அரசு மருத்துவமனைக்கு மாற்​றம் செய்​யப்​பட்​டுள்​ளனர்​.

<div class="paragraphs"><p>திருச்சி மாவட்டம் அதவத்தூரில் பூட்டி ‘சீல்’ வைக்கப்பட்டுள்ள போதை மறுவாழ்வு மையம்.</p></div>
சீனா வழியாக எவரெஸ்ட் சிகரத்தை ஏறும் தூத்துக்குடி இளைஞருக்கு அமைச்சர் பாராட்டு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in