சென்னை | இளம் பெண்ணுக்கு ஆபாச படம் அனுப்பிய தாய் மாமன் கைது

Updated on
1 min read

சென்னை: சென்னை தேனாம்​பேட்டை​யைச் சேர்ந்த பெண் ஒருவர், தனது தம்பி செல்​வவேலின் மருத்​து​வப் படிப்​புக்​காக ரூ.5 லட்​சம் பண உதவி செய்​துள்​ளார்.

படிப்பை முடித்த பிறகு தனது மகளை திரு​மணம் செய்து கொள்வதாக செல்​வவேல் உறு​தி​யளித்​த​தால், பணத்​தைக் கொடுத்​த​தாகக் கூறப்​படு​கிறது. ஆனால், மருத்​து​வப் படிப்பை முடித்த செல்​வவேல், வேறொரு மருத்​து​வரை திரு​மணம் செய்து கொண்​டார். செல்​வவேலுக்கு தஞ்​சாவூர் மருங்​குளம் அரசு ஆரம்ப சுகா​தார நிலை​யத்​தில் மருத்​து​வ​ராகப் பணி​ கிடைத்​துள்​ளது.

அந்த பெண்ணின் மற்​றொரு மகள் சட்​டப்​படிப்​பில் சேருவதற்காகப் பணம் தேவைப்​பட்டதால் அந்த இளம் ​பெண் தனது தாய் மாமன் செல்​வவேலிடம் பணத்​தைத் கேட்​டுள்​ளார். இதில் ஆத்​திரமடைந்த செல்​வவேல், அந்த இளம் ​பெண்​ணிடம் செல்​போனில் ஆபாச​மாகப் பேசி​யதோடு, தனது நிர்​வாண புகைப் ​படத்​தை​யும் வாட்​ஸ்​- அப்பில் அனுப்​பிய​தாகக் கூறப்படுகிறது.

இதில் மன உளைச்​சலான இளம்​பெண், சென்னை தேனாம்பேட்டை காவல் நிலை​யத்​தில் அளித்த புகாரின் அடிப்படை​யில், வழக்​குப் ​ப​திவு செய்த போலீ​ஸார், அரசு மருத்துவர் செல்வ வேலை கைது செய்து சென்​னைக்கு அழைத்து வந்து விசா​ரணை நடத்தி வரு​கின்​றனர். அவர் அரசு மருத்துவராகப் பணி​யில் சேர்ந்த 3 நாட்​களில் கைது செய்யப்பட்டுள்​ளது குறிப்​பிடத்​தக்​கது.

சென்னை | இளம் பெண்ணுக்கு ஆபாச படம் அனுப்பிய தாய் மாமன் கைது
“முந்தைய திமுக அரசின் ஊழலால் சிஎம்டிஏவில் ஊதியம் வழங்க பணம் இல்லை” - அன்புமணி குற்றச்சாட்டு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in