சென்னை | ஆட்டோ ஓட்டுநரிடம் வழிப்பறியில் ஈடுபட்டவர் கைது

சென்னை | ஆட்டோ ஓட்டுநரிடம் வழிப்பறியில் ஈடுபட்டவர் கைது
Updated on
1 min read

சென்னை: ஆட்டோ ஓட்​டுநரிடம் கத்தி முனை​யில் வழிப்​பறி​யில் ஈடு​பட்ட நபர் கைது செய்​யப்​பட்​டார். திரு​வான்​மியூர், பிள்​ளை​யார் கோயில் தெரு​வில் வசித்து வருபவர் விஸ்​வேஸ்​வரன் (29). ஆட்டோ ஓட்டி வரு​கிறார்.

இவர் கடந்த 16-ம் தேதி இரவு, பெசன்ட் நகர், அன்னை வேளாங்​கண்ணி சர்ச் ஆட்டோ நிறுத்​தத்​தில் நின்​றிருந்​தார். அப்​போது, அங்கு வந்த நபர் ஒரு​வர் கத்தி முனை​யில் விஸ்​வேஸ்​வரனிட​மிருந்து பணம், செல்​போனை பறித்து தப்​பி​னார். இதை சற்​றும் எதிர்​பா​ராத அவர் கூச்​சலிட்​டார்.

அலறல் சத்​தம் கேட்டு அக்​கம் பக்​கத்​தினர் திரண்டு பிடிக்க முற்​பட்​ட​போது, கீழே கிடந்த ஜல்லி கற்​களை எடுத்து வீசி எறிந்​து, வழிப்​பறி கொள்​ளை​யன் தப்​பி​னான்.

இது தொடர்​பாக, விஸ்​வேஸ்​வரன் திரு​வான்​மியூர் காவல் நிலை​யத்​தில் புகார் அளித்​தார். அதன்​படி, போலீ​ஸார் வழக்​குப் பதிந்து விசா​ரித்​தனர்.

சிசிடிவி கேமரா காட்​சிகள் அடிப்​படை​யில், கத்திமுனை​யில் வழிப்​பறி செய்து தப்​பியது பெசன்ட் நகரில் உள்ள திடீர் நகரைச் சேர்ந்த ஜெயகு​மார் (37) என்​பது தெரிந்​தது. தலைமறை​வாக இருந்த அவரை போலீ​ஸார் நேற்று முன்​தினம் கைது செய்​து சிறையில் அடைத்தனர்.

சென்னை | ஆட்டோ ஓட்டுநரிடம் வழிப்பறியில் ஈடுபட்டவர் கைது
மின்நுகர்வோர் குறை தீர்க்க முன்னுரிமை தர முதல்வர் அறிவுறுத்தல்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in