காதலிக்கு வேறு ஒருவருடன் திருமணம்: சீர்காழியில் 4 இடங்களில் பெட்ரோல் குண்டு வீசியவர் கைது

காதலிக்கு வேறு ஒருவருடன் திருமணம்: சீர்காழியில் 4 இடங்களில் பெட்ரோல் குண்டு வீசியவர் கைது
Updated on: 
1 min read

மயிலாடுதுறை: சீர்காழி தென்பாதி பிரதான சாலையில் வணிக நிறுவனங்கள் நிறைந்த பகுதியில் நேற்று முன்தினம் இரவு 4 இடங்களில் இளைஞர் ஒருவர் பெட்ரோல் குண்டு வீசியுள்ளார். இதைக்கண்ட வணிகர்கள் உடனடியாக கடைகளை அடைத்துள்ளனர்.

இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீஸார் அப்பகுதியில் இருந்த சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர். இதில், பெட்ரோல் குண்டு வீசியவர், சீர்காழி தென்பாதி குளத்து மேட்டுத் தெருவைச் சேர்ந்த நீலகண்டன் (22) என்பதும், இவர் கடந்த மார்ச் மாதம் மதுபோதையில் அவரது நண்பர் தலையில் கல்லைப் போட்டு கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு, ஜாமீனில் வெளியே வந்தவர் என்பதும் தெரியவந்தது.

இதையடுத்து, நீலகண்டனை போலீஸார் நேற்று கைது செய்து விசாரணை நடத்தினர். தான் காதலித்த பெண்ணுக்கு வேறு ஒருவருடன் திருமணம் நடந்ததால், காதலியின் தந்தையிடம் தகராறில் ஈடுபட்டதாகவும், பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் பெட்ரோல் குண்டை வீசியதாகவும் நீலகண்டன் தெரிவித்துள்ளார்.

காதலிக்கு வேறு ஒருவருடன் திருமணம்: சீர்காழியில் 4 இடங்களில் பெட்ரோல் குண்டு வீசியவர் கைது
மனைவியை துன்புறுத்திய வழக்கில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட டிஎஸ்பி கைது

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in