கடன் செலுத்தாததால் ஜப்தி செய்யப்படவிருந்த வீட்டை குத்தகைக்கு விட்டு ரூ.20 லட்சம் மோசடி செய்தவர் கைது

ராஜகோ​பாலன்

ராஜகோ​பாலன்

Updated on
1 min read

சென்னை: கடன் செலுத்​தாததால் ஜப்தி செய்​யப்​பட​விருந்த வீட்டை குத்​தகைக்கு விட்டு ரூ.20 லட்​சம் மோசடி செய்​தவர் கைது செய்​யப்​பட்​டார். கடலூரைச் சேர்ந்​தவர் தீபக் (29). இவர், கடந்த 2024-ம் ஆண்டு சென்​னை​யில் வாடகைக்கு வீடு தேடி கொண்​டிருந்​தார்.

அப்​போது, முகப்​பேர் மேற்​கு, வள்​ளலார் தெரு​வைச் சேர்ந்த ராஜகோ​பாலன் (59) என்​பவரது அறி​முகம் கிடைத்​தது. அவர், முகப்​பேர், பன்​னீர் நகரில் தனக்கு சொந்​த​மான அடுக்​கு​மாடி குடி​யிருப்​பில் வீடு உள்​ள​தாக​வும், அந்த வீட்டை ரூ.20 லட்​சத்​துக்கு குத்​தகைக்கு தரு​வ​தாக​வும் தெரி​வித்​துள்​ளார்.

இதையடுத்​து, ரூ.20 லட்​சத்​துக்கு கு்த்​தகை ஒப்​பந்​தம் போடப்​பட்​டுள்​ளது. தீபக் பணத்தை ராஜகோ​பாலனிடம் கொடுத்​துள்​ளார். இதையடுத்​து, 2024 ஜூன் மாதம் முதல் குத்​தகைக்கு வசித்​துள்​ளார். இந்​நிலை​யில், நீதி​மன்​றத்​தில் இருந்து வீட்டை காலி செய்து ஒப்​படைக்​கும்​படி ஜப்தி நோட்​டீஸ் வந்​துள்​ளது.

அதாவது, ராஜகோ​பாலன் 2017-ம் ஆண்டு அந்த வீட்டை தனி​யார் நிதி நிறு​வனத்​தில் அடமானம் வைத்​து, சுமார் ரூ.78 லட்​சத்​துக்கு கடன் பெற்று கடனை செலுத்​தாத​தால், சம்​பந்​தப்​பட்ட நிதி நிறு​வனம் ராஜகோ​பாலனுக்கு நோட்​டீஸ் அனுப்​பி​யும் பணம் செலுத்​த​வில்​லை.

நிதி நிறு​வனம் வீட்டை ஏலத்​தில் விட்​டு, ஏலத்​தில் எடுத்த நிறு​வனம், நீதி​மன்​றம் மூலம் வீட்டை ஜப்தி செய்ய நோட்​டீஸ் அனுப்​பி​யிருந்​தது தெரிய​வந்​தது. இதையடுத்​து, ராஜகோ​பாலன் வெளி​யேற்​றப்​பட்​டார். பின்​னர், தான் கொடுத்த குத்​தகை பணத்தை திரும்ப கொடுக்​கும்​படி தீபக் கேட்​டுள்​ளார்.

ஆனால், ராஜகோ​பாலன் பணத்தை திருப்பி தராமல் இழுத்தடித்தள்ளார். இதையடுத்​து, இந்த விவ​காரம் தொடர்​பாக, தீபக் நொளம்​பூர் காவல் நிலை​யத்​தில் புகார் அளித்​தார்.

அதன்​படி, போலீ​ஸார் வழக்​குப் பதிந்து விசா​ரித்​தனர். இதில், புகார் உண்மை என தெரிய​வந்​ததையடுத்​து, ராஜகோ​பாலனை போலீ​ஸார் நேற்று முன்​தினம் கைது செய்​தனர். இவர் மீது ஏற்​க​னவே காஞ்​சிபுரம் மாவட்​டத்​தில் ஒரு மோசடி வழக்கு உள்​ளது என்​பது குறிப்​பிடத்​தக்​கது.

<div class="paragraphs"><p>ராஜகோ​பாலன்</p></div>
13 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட திமுக பிரமுகர் கைது: அமமுக, பாஜக கடும் கண்டனம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in