ஒப்பந்ததாரரிடம் ரூ.1.30 லட்சம் லஞ்சம் வாங்கியதாக வீடியோ வைரல்: மாம்பாக்கம் ஊராட்சி மன்றத் தலைவர் கைது

ஒப்பந்ததாரரிடம் ரூ.1.30 லட்சம் லஞ்சம் வாங்கியதாக வீடியோ வைரல்: மாம்பாக்கம் ஊராட்சி மன்றத் தலைவர் கைது
Updated on
1 min read

செங்​கல்​பட்​டு: செங்​கல்​பட்டு மாவட்​டம், திருப்​போரூர் தொகு​திக்கு உட்​பட்ட மாம்​பாக்​கம் ஊராட்சி மன்​றத் தலை​வரும், தமிழக வெற்​றிக் கழகத்​தின் செங்​கல்​பட்டு கிழக்கு மாவட்ட இணை செய​லா​ள​ரு​மான என். வீரா (எ) வீரா​சாமி, ஒப்​பந்​த​தா​ரரிடம் ரூ.1.30 லட்​சம் லஞ்​சம் பெற்​ற​தாக கைது செய்யப்பட்டுள்ளார்.

மாம்​பாக்​கம் ஊராட்​சி​யில் ரூ.9.80 லட்​சம் மதிப்​பீட்​டில் சிமெண்ட் சாலை அமைத்த ஒப்​பந்​த​தா​ரர் நவீன், பணி முடிந்​தும் பில் நிலு​வை​யில் இருந்​த​தாக​வும், அதை அனு​ம​திக்க வீரா முதலில் ரூ.1 லட்​சம் லஞ்​சம் கேட்​ட​தாக​வும் கூறப்​படு​கிறது.

பின்​னர் நடை​பெற்ற பேச்​சு​வார்த்​தை​யில் தொகை ரூ.1.30 லட்​ச​மாக நிர்​ண​யிக்​கப்​பட்​ட​தாக​தெரிகிறது. அதில் ஒரு பகுதி கூகுள் பே (GPay) மூலம் அனுப்​பப்​பட்​டதுடன், மீத​முள்ள தொகையை நேரில் வழங்​கிய காட்​சிகள் சமூக வலை​தளங்​களில் வெளி​யானது.

இந்த விவ​காரம் பரபரப்பை ஏற்​படுத்​திய நிலை​யில், செங்​கல்​பட்டு கிழக்கு மாவட்ட செய​லா​ளர் சி.​வி. தினகரன் (எ) தீனா, ஜூலை 15-ம் தேதி வெளி​யிட்ட அறி​விப்​பில், “கட்​சிக்கு களங்​கம் விளைவிக்​கும் வகை​யில் செயல்​பட்​ட​தால் வீரா (எ) வீரா​சாமி இன்று முதல் கட்​சி​யின் அடிப்​படை உறுப்​பினர் மற்​றும் அனைத்து பொறுப்​பு​களி​லிருந்​தும் நீக்​கப்​படு​கிறார்” என்று தெரி​வித்​துள்​ளார்.

இந்நிலையில் தாழம்பூர் போலீஸார் மாம்பாக்கம் ஊராட்சி மன்​றத் தலை​வர் என். வீராவை கைது செய்துள்ளனர். வீரா​சாமி மீது கடந்த 2023-ம் ஆண்டு ஊராட்சி நிர்​வாக முறை​கேடு தொடர்​பாக வார்டு உறுப்​பினர்​கள் ஆட்​சி​யரிடம் புகார் அளித்​திருந்​ததும், பின்​னர் அவரது காசோலை கையொப்ப அதி​காரம் ரத்து செய்​யப்​பட்​ட​தாக​வும், 2025-ம் ஆண்டு நம்​பிக்​கை​யில்லா தீர்​மானம் மூலம் தலைவர் பதவியை இழந்த அவர், நீதி​மன்ற உத்​தர​வின் பேரில் அண்​மை​யில் மீண்​டும் தலை​வர் பொறுப்​பேற்​றிருந்​தது​ம் குறிப்பிடத்தக்கது.

ஒப்பந்ததாரரிடம் ரூ.1.30 லட்சம் லஞ்சம் வாங்கியதாக வீடியோ வைரல்: மாம்பாக்கம் ஊராட்சி மன்றத் தலைவர் கைது
அமோனியா கசிவு விவகாரம்: மத்திய, மாநில அரசுகளுக்கு பசுமைத் தீர்ப்பாயம் நோட்டீஸ்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in