தொழிலதிபரை கட்டிப்போட்டு நகை, பணம் கொள்ளை: குற்றவாளிகளை நெருங்கிவிட்டதாக புழல் போலீஸ் தகவல்

தொழிலதிபரை கட்டிப்போட்டு நகை, பணம் கொள்ளை: குற்றவாளிகளை நெருங்கிவிட்டதாக புழல் போலீஸ் தகவல்
Updated on
1 min read

சென்னை: தொழில​திபரை கட்​டிப்​போட்டு நகை, பணம் கொள்ளை அடிக்​கப்​பட்ட வழக்​கில் குற்​ற​வாளி​களை நெருங்கி விட்​ட​தாக, போலீ​ஸார் தெரி​வித்​துள்​ளனர்.

சென்​னை, புழல் அடுத்த மகாவீர் கார்​டன் பகு​தி​யைச் சேர்ந்​தவர் விஜயகு​மார். இவர், மணிப்​பூர் மாநிலத்​தில், கம்​பளிப் போர்​வை​கள் மற்​றும் வீட்டு உபயோகப் பொருட்​கள் விற்​பனை செய்​யும் கடை நடத்தி வரு​கிறார். நேற்​று ​முன்​தினம் அதி​காலை இவரது வீட்​டுக்​குள் 6 பேர் கொண்ட மர்ம கும்​பல் ஒன்று முகமூடி அணிந்து அதிரடி​யாக புகுந்​தது. வீட்​டுக்​குள் நுழைந்த அக்​கும்​பல், விஜயகு​மார், அவரது மனை​வி, மகள்​கள் மற்​றும் தாயார் ஆகியோரை கத்​தி​முனை​யில் மிரட்டி சிறைபிடித்​தனர்.

மேலும், குடும்​பத்​தினர் அனை​வரை​யும் கட்​டிப்​போட்​டு​விட்​டு, பீரோ​வில் இருந்த 30 பவுன் தங்க நகைகள் மற்​றும் 25 லட்​சம் ரூபாய் ரொக்​கப் பணத்தை எடுத்​துக் கொண்​டு, தாங்​கள் கொண்டு வந்த காரில் மின்​னல் வேகத்​தில் தப்​பிச் சென்​றனர்.

சினிமா பாணி​யில் நடந்த இந்த கொள்ளை குறித்து தகவல் அறிந்த புழல் காவல்​துறை​யினர், சம்பவ இடத்​துக்கு சென்று விசாரணை மேற்​கொண்​டனர். இச்​சம்​பவம் குறித்து வழக்​குப் பதிவு செய்​துள்ள போலீ​ஸார், குற்​ற​வாளி​களைப் பிடிக்க 5 தனிப்படைகளை அமைத்து தீவிர தேடு​தல் வேட்​டை​யில் ஈடுபட்டுள்​ளனர்.

கொள்​ளை​யர்​கள் தப்​பிச் சென்ற பாதை​யில் உள்ள சிசிடிவி கேமரா பதிவு​கள் மற்​றும் அந்​தப் பகு​தி​யில் பதி​வான செல்​போன் சிக்​னல்​களை கொண்டு போலீ​ஸார் ஆய்வு செய்து வரு​கின்​றனர். தற்​போது கிடைத்​துள்ள ஆதா​ரங்​களின் அடிப்​படை​யில், கொள்​ளை​யர்​களை நெருங்​கி​விட்​ட​தாக​வும், இன்​னும் ஓரிரு நாட்​களில் குற்​ற​வாளி​கள் அனை​வரும் கைது செய்​யப்​படு​வார்​கள் என்​றும் காவல்​துறை தரப்​பில்​ தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொழிலதிபரை கட்டிப்போட்டு நகை, பணம் கொள்ளை: குற்றவாளிகளை நெருங்கிவிட்டதாக புழல் போலீஸ் தகவல்
தாய்​லாந்து மாஸ்​டர்ஸ் பாட்​மிண்​டன்: இறுதிச் சுற்றில் தேவிகா சிஹாக்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in