ரயில்வே பெண் ஊழியருக்கு பாலியல் தொந்தரவு: கேரள இளைஞருக்கு 5 ஆண்டு சிறை

தென்காசி மகளிர் நீதிமன்றம் உத்தரவு
ரயில்வே பெண் ஊழியருக்கு பாலியல் தொந்தரவு: கேரள இளைஞருக்கு 5 ஆண்டு சிறை
Updated on
1 min read

தென்காசி: ரயில்வே ஊழியருக்கு பாலியல் தொந்​தரவு அளித்த கேரள இளைஞருக்கு 5 ஆண்​டு​கள் சிறை தண்​டனை விதித்து தென்காசி மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

தென்​காசி மாவட்​டம் பாவூர்​சத்​திரத்​தில் ரயில்வே கேட் கீப்​ப​ராகப் பணி​யாற்​றிய பெண் ஊழியர் கடந்த 2023 பிப். 16-ம் தேதி இரவு பணி​யில் இருந்​தார்.

அப்​போது, அவரது அறைக்​குள் அத்​து​மீறி புகுந்த இளைஞர் ஒரு​வர், ரயில்வே பெண் ஊழியரைத் தாக்​கி, பாலியல் தொந்​தரவு கொடுத்​துள்​ளார்.

அதிர்ச்​சி​யடைந்த அந்​தப் பெண் ஊழியர் கூச்​சலிட்​ட​தால், அந்த இளைஞர் அங்​கிருந்து தப்​பிச் சென்​றார். ரயில்வே பெண் ஊழியர் பாலியல் தொந்தரவுக்கு உள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

இது தொடர்​பான புகாரின் பேரில் தென்​காசி ரயில்வே போலீ​ஸார் விசா​ரணை நடத்​தினர். விசா​ரணை​யில், பாவூர்​சத்​திரம் பகு​தி​யில் வேலை செய்து வந்த, கேரள மாநிலம் கொல்​லம் மாவட்​டம், வாழ​விழா பகு​தி​யைச் சேர்ந்த அனீஷ் (27) என்​பவர், ரயில்வே ஊழியருக்கு பாலியல் தொந்​தரவு கொடுத்​தது தெரிய​வந்​தது.

இதையடுத்​து, அவரைப் போலீ​ஸார் கைது செய்​தனர். இந்த வழக்கு தென்​காசி மகளிர் நீதி​மன்​றத்​தில் நடை​பெற்​றது. வழக்கை விசா​ரித்த நீதிபதி (பொறுப்​பு) பி.​ராஜவேலு, குற்​றம் சுமத்​தப்​பட்ட அனீஷுக்கு 5 ஆண்​டு​கள் கடுங்​காவல் சிறை தண்​டனை​யும், ரூ. 2,000 அபராத​மும் விதித்து தீர்ப்​பளித்​தார். இந்த வழக்​கில் அரசுத் தரப்​பில் வழக்​கறிஞர் கவிதா ஆஜராகி​னார்.

ரயில்வே பெண் ஊழியருக்கு பாலியல் தொந்தரவு: கேரள இளைஞருக்கு 5 ஆண்டு சிறை
புதுக்கோட்டை: பஜ்ரங்தள் அமைப்பின் முன்னாள் நிர்வாகி கொலை

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in