வீராங்கனையின் பாலியல் புகார்: தலைமறைவாக இருந்த கபடி பயிற்சியாளர் ராஜி கைது

ராஜி

ராஜி

Updated on
1 min read

கண்​ணகி நகர்: சென்னை கண்​ணகி நகர் பகு​தி​யில் 17 வயது கபடி வீராங்கனையான பாதிக்​கப்​பட்ட சிறுமி அளித்த புகாரின்​ பேரில், கடந்த ஜூன் 26-ம் தேதி போக்சோ சட்​டம் உள்​ளிட்ட பிரிவு​களின் கீழ் வழக்​குப் பதிவு செய்​யப்​பட்​ட​தாக போலீ​ஸார் தெரி​வித்​தனர்.

சிறுமிக்கு பல ஆண்​டு​களாக கபடி பயிற்சி அளித்து வந்த ராஜி, பயிற்சி மற்​றும் போட்டி வாய்ப்​பு​களை காரணம் காட்டி பாலியல் அத்​து​மீறலில் ஈடு​பட்​ட​தாக​வும், இதுகுறித்து வெளி​யில் கூறக்​கூ​டாது என மிரட்​டிய​தாக​வும் புகாரில் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

வழக்​குப் பதிவு செய்​யப்​பட்​டதையடுத்து தலைமறை​வான ராஜியை பிடிக்க செம்​மஞ்​சேரி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீ​ஸார், உதவி ஆணை​யாளர் வெங்​கடேசன் தலை​மை​யில் தனிப்​படை அமைத்து தேடி வந்​தனர்.

இந்​நிலை​யில், கொடைக்​கானலில் பதுங்​கி​யிருந்த ராஜியை கைது செய்த போலீ​ஸார், சென்னை அழைத்து வந்து தீவிர விசா​ரணை நடத்தி வரு​கின்​றனர்.

<div class="paragraphs"><p>ராஜி</p></div>
கோட்டூர்புரத்தில் தெரு நாய் கடித்து கூலி தொழிலாளி உயிரிழப்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in