சென்னை விமான நிலையத்தில் சுங்கத் துறை அதிகாரிபோல நடித்து பயணியிடம் ரூ.12 லட்சம் நகை பறிப்பு

சென்னை விமான நிலையத்தில் சுங்கத் துறை அதிகாரிபோல நடித்து பயணியிடம் ரூ.12 லட்சம் நகை பறிப்பு
Updated on
1 min read

சென்னை: விமான நிலை​யத்​தில் சுங்​கத்​துறை அதி​காரி போல் நடித்து பயணியிடம் ரூ.12 லட்​சம் மதிப்​புள்ள நகை பறிக்​கப்​பட்​டது. சென்னை அண்ணா நகரைச் சேர்ந்​தவர் நந்​தகோ​பால் (23).

விரு​கம்​பாக்​கத்​தில் உள்ள தனி​யார் நிறு​வனத்​தில் பணி​யாற்றி வரு​கிறார். நேற்று முன்​தினம் இரவு 10 மணிக்கு கோவை​யில் இருந்து சென்னை வரும் இண்​டிகோ ஏர்​லைன்ஸ் பயணி​கள் விமானத்​தில் வரவுள்ள பெண்பயணி​யிடம் ஒரு பார்​சலை வாங்​கிக் கொண்டு செல்​வதற்​காக, விமான நிலை​யத்​தில் காத்​திருந்​தார்.

அந்த பெண் வந்​ததும், இரு​வரும் விமான நிலைய டெர்​மினல்-1 போர்​டிகோ பகு​தி​யில் சென்று கொண்​டிருந்​தனர். அப்​போது அங்​கிருந்த ஒரு நபர், அவர்​களை நிறுத்​தி, ‘நான் சுங்​கத் துறை அதி​காரி​, நீங்​கள் வைத்​திருக்​கும் பார்​சலில் தங்க நகை இருப்​ப​தால் விசா​ரிக்க வேண்​டும்’ எனக்​கூறி, பார்​சலை வாங்​கிக் கொண்​டு, பின் தொடர்ந்து வரு​மாறு கூறி​ வேக​மாக நடந்து சென்​றார். ஆனால் சிறிது நேரத்​தில் அந்த நபர் மாய​மாகி​விட்​டார்.

அந்த பார்​சலில் ரூ.12 லட்​சம் மதிப்​புள்ள 12 பவுன் நெக்​லஸ் இருந்​த​தால் நந்​தகோ​பால் அதிர்ச்சி அடைந்​தார். இதுபற்றி விமான நிலை​யத்​தில் இருந்த மத்​திய தொழில் பாது​காப்​புப் படை​யினர், சுங்க அதி​காரி​கள் ஆகியோரிடம் தெரி​வித்​தார்.

உடனே சுங்​கத்​துறை அதி​காரி​கள் தங்​களு​டைய அலு​வல​கத்​தில் விசா​ரித்​த​தில், அதி​காரி​கள் யாரும் பயணி​யிடம் இருந்து பார்​சலை பெற​வில்லை என்​பது உறு​தி​யானது.

இதையடுத்து அவர் சென்னை விமான நிலைய போலீ​ஸில் புகார் அளித்​தார். போலீ​ஸார் வழக்​குப் பதிவு செய்து கண்​காணிப்பு கேம​ராக்​களில் பதி​வான காட்​சிகளை வைத்​து வி​சா​ரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை விமான நிலையத்தில் சுங்கத் துறை அதிகாரிபோல நடித்து பயணியிடம் ரூ.12 லட்சம் நகை பறிப்பு
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்ற வழக்குகளை 2 மாதங்களில் விசாரித்து முடிக்க வேண்டும்: உயர் நீதிமன்றம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in