பெண்களுக்கு எதிரான பாலியல் குற்ற வழக்குகளை 2 மாதங்களில் விசாரித்து முடிக்க வேண்டும்: உயர் நீதிமன்றம்

பெண்களுக்கு எதிரான பாலியல் குற்ற வழக்குகளை 2 மாதங்களில் விசாரித்து முடிக்க வேண்டும்: உயர் நீதிமன்றம்
Updated on
1 min read

சென்னை: பெண்​களுக்கு எதி​ரான பாலியல் குற்​றங்​கள் தொடர்​பான வழக்​கு​களை 2 மாதங்​களில் விசா​ரித்து முடிக்க அனைத்து முயற்​சிகளை​யும் எடுக்க வேண்​டும் என்று அனைத்து கீழமை நீதி​மன்​றங்​களுக்​கும் உயர் நீதி​மன்ற தலைமை நீதிபதி அமர்வு அறி​வுறுத்​தி​யுள்​ளது.

திரு​வண்​ணா​மலைக்கு சுவாமி தரிசனம் செய்ய வந்த ஆந்​தி​ராவைச் சேர்ந்த இளம்​பெண்ணை பாலியல் வன்​கொடுமை செய்​த​தாக திரு​வண்​ணா​மலை கிழக்கு காவல் நிலைய போலீ​ஸார் சுந்​தர், சுரேஷ் ராஜ் மீது திரு​வண்​ணா​மலை அனைத்து மகளிர் போலீ​ஸார் கைது செய்​தனர்.

இந்த வழக்கை விரைந்து விசா​ரிக்க உத்​தர​விடக் கோரி​யும், தமிழகம் முழு​வதும் போக்சோ மற்​றும் மகளிர் சிறப்பு நீதி​மன்​றங்​களில் நிலு​வை​யில் உள்ள வழக்​கு​களின் விவரங்​களை தெரிவிக்​கக் கோரி​யும் பாதிக்​கப்​பட்ட ஆந்​திர இளம்​பெண் சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் பொதுநல மனுத் தாக்​கல் செய்​தார்.

தலைமை நீதிபதி எஸ்​.ஏ. தர்​மா​தி​காரி, நீதிபதி ஜி.அருள்​முரு​கன் முன்பு இந்த வழக்கு நேற்று மீண்​டும் விசா​ரணைக்கு வந்​தது. அப்​போது நீதிப​தி​கள் பிறப்​பித்த உத்​தரவு விவரம்: பெண்களுக்கு எதி​ரான பாலியல் குற்​றங்​கள் தொடர்​பான வழக்​கு​களை 2 மாதங்​களில் விசா​ரித்து முடிக்க முதன்மை அமர்வு நீதி​மன்​றங்​கள், மகளிர் சிறப்பு நீதி​மன்​றங்​கள் அனைத்து முயற்​சிகளை​யும் எடுக்க வேண்​டும்.

பெண்​கள், குழந்​தைகளுக்கு எதி​ரான பாலியல் குற்ற வழக்​கு​களின் விசா​ரணையைத் தேவை​யின்றி தள்ளிவைக்​கக் கூடாது என அனைத்து கீழமை நீதி​மன்​றங்​களுக்​கும் உயர் நீதி​மன்ற தலை​மைப் பதி​வாளர் சுற்​றறிக்கை பிறப்​பிக்க வேண்​டும்.

போக்சோ வழக்​கு​களில் வழக்கை விசா​ரணைக்கு எடுத்​துக்​கொண்ட 30 நாட்​களில், பாதிக்​கப்​பட்ட குழந்தை அல்​லது சிறார்​களிடம் வாக்​குமூலம் பதிவு செய்​து, ஓராண்​டுக்​குள் விசா​ரணையை போக்சோ சிறப்பு நீதி​மன்​றங்​கள் முடிக்க வேண்​டும். குறிப்​பாக போக்சோ வழக்​கு​களை கையாளுவது குறித்து சிறப்பு நீதி​மன்ற நீதிப​தி​களுக்கு மாநில நீதித்​துறை பயிற்​சி​யகம் உரிய பயிற்சி அளி்க்க வேண்​டும்.

வேலியே பயிரை மேய்ந்த கதை​யாக, பெண்​களுக்​குப் பாது​காப்பு வழங்க வேண்​டிய போலீ​ஸாரே வேட்​டைக்​காரர்​களாக மாறும் நிகழ்​வு​கள் மீண்​டும் தமிழகத்​தில் நடை​பெறாது என்​பதை உறுதி செய்ய வேண்​டும். போலீ​ஸாரின் அதி​கார துஷ்பிரயோகத்தை தடுக்​கும் வகை​யில் இரவு நேர ரோந்​துப் பணி​களை உயர் அதி​காரி​கள் ஆய்வு செய்ய வேண்​டும்.

பெண்​கள், குழந்​தைகளுக்கு எதி​ரான பாலியல் சம்​பவங்​களை தடுக்​கும் வகை​யில் அமைக்​கப்​பட்​டுள்ள சிறப்பு அதிரடிப்​படையை அனைத்து மாவட்​டங்​களி​லும் அமைக்க டிஜிபி நடவடிக்கை எடுக்க வேண்​டும்.

திண்​டுக்​கல், மதுரை, தூத்​துக்​குடி, கடலூர் போக்சோ சிறப்பு நீதி​மன்​றங்​களில் காலி​யாக உள்ள நீதிபதி பணி​யிடங்​களை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்​டும். தமிழகத்​தில் மேலும் 6 புதிய போக்சோ சிறப்பு நீதி​மன்​றங்​களை தொடங்​கு​வது குறித்து 2 ​மாதங்​களில்​ உயர்​ நீதி​மன்​ற தலை​மைப்​ பதி​வாளர்​ அறிக்​கை ​தாக்​கல்​ செய்​ய வேண்​டும்​. இவ்​​வாறு நீதிப​தி​கள்​ உத்​தர​விட்​டுள்​ளனர்​.

பெண்களுக்கு எதிரான பாலியல் குற்ற வழக்குகளை 2 மாதங்களில் விசாரித்து முடிக்க வேண்டும்: உயர் நீதிமன்றம்
‘வீ த லீடர்ஸ்' அமைப்பின் பிரத்யேக செயலி அறிமுகம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in