ரூ.22.10 கோடி மோசடியில் அரசு அதிகாரிகளுக்கு தொடர்பா?

ரூ.22.10 கோடி மோசடியில் அரசு அதிகாரிகளுக்கு தொடர்பா?
Updated on: 
1 min read

தாராபுரம்: ஊராட்சி ஒன்றியத்தின் வங்கிக் கணக்கில் ரூ.22.10 கோடி ஆன்லைன் மூலம் மோசடி செய்யப்பட்டதில் அரசு அதிகாரிகளுக்கு தொடர்பு உள்ளதா என்று சைபர் கிரைம் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

தமிழகத்தில் ஊரக வளர்ச்சித் துறை வங்கிக் கணக்குகளில் இருந்து மொத்தம் ரூ.22.10 கோடி ஆன்லைன் மூலம் முறைகேடாகப் பரிமாற்றப்பட்டுள்ளது. இதில், திருப்பூர் மாவட்டம் தாராபுரம் ஒன்றியத்தின் வங்கிக் கணக்கில் இருந்து ரூ.5 கோடி பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஓ.டி.பி கடவுச்சொல் இன்றி இவ்வளவு பெரிய தொகை கைமாறியது எப்படி என்பது குறித்து சைபர் கிரைம் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுதொடர்பாக, தாராபுரம் வட்டார வளர்ச்சி அலுவலர் கனகராஜ் மற்றும் உதவி செயல் அலுவலர் நாகலிங்கத்திடம் சென்னையில் 2 நாட்கள் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையின்போது ஏற்பட்ட திடீர் நெஞ்சுவலி காரணமாக, வட்டார வளர்ச்சி அலுவலர் கனகராஜூக்கு மருத்துவமனையில் ‘ஸ்டென்ட்’ பொருத்தப்பட்டு தற்போது அவர் மருத்துவ விடுப்பில் உள்ளார்.

ரூ.22.10 கோடி மோசடியில் அரசு அதிகாரிகளுக்கு தொடர்பா?
தவெகவின் 6 மாத கால ஆட்சி எப்படி? - ஒரு விரைவுப் பார்வை

X