தாம்பரம் | மனைவியின் அந்தரங்கப் படங்களை ஆபாசமாக மார்ஃபிங் செய்த கணவர் சிறையில் அடைப்பு

நிரஞ்சன் சர்மா

நிரஞ்சன் சர்மா

Updated on: 
1 min read

தாம்பரம்: மனைவி​க்கு தெரியாமல் அவர் குளிக்​கும்​போதும், உடை மாற்​றும்​போதும் ரகசி​ய​மாக புகைப்​படம், வீடியோ எடுத்து, செயற்கை நுண்​ணறிவு தொழில்​நுட்​பத்​தைப் பயன்​படுத்தி ஆபாசப் படங்​களாக மாற்​றிய​தாகக் கணவரை போலீ​ஸார் கைது செய்து சிறை​யில் அடைத்​தனர்.

தாம்​பரம் அருகே புதுப்பெருங்​களத்​தூர், எஸ்எஸ்எம் நகரைச் சேர்ந்​தவர் ஐஸ்​வர்யா (30). இவருக்​கும் ஆதனூர், ஊரப்​பாக்​கத்​தைச் சேர்ந்த நிரஞ்​சன் சர்மா என்​பவருக்​கும் கடந்த 2019-ம் ஆண்டு மே 29-ம் தேதி திரு​மணம் நடை​பெற்​றது. இவர்​களுக்கு குழந்தை உள்​ளது.

நகைகள் அடமானம்

திரு​மணத்​தின்​போது பெற்​றோர் வழங்​கிய தங்க நகைகளை ஐஸ்​வர்யா ஊரப்​பாக்​கத்​தில் உள்ள வங்கி பாது​காப்​புப் பெட்​டகத்​தில் வைத்​திருந்​துள்​ளார். அந்த நகைகளை கணவர் நிரஞ்​சன் தனக்​குத் தெரியாமல் ஒவ்​வொன்​றாக எடுத்து அவற்றை விற்​றும், அட​மானம் வைத்​தும் வந்​தது தெரிந்​தது.

இத​னால் இரு குடும்​பத்​தினருக்​கும் இடையே தக​ராறு ஏற்​பட்​டுள்​ளது. இதையடுத்து கடந்த செப்.20-ம் தேதி கணவரின் செல்​போனை எடுத்​துக்​கொண்டு குழந்​தையுடன் தனது தாய் வீட்​டுக்​குச் சென்​றுள்​ளார்.

கணவர் மிரட்டல்

கடந்த நவ.4-ம் தேதி கணவரின் செல்​போனில், தனது புகைப்​படங்​கள் ஆபாச​மாக மார்ஃபிங் செய்​யப்​பட்​டிருந்​ததைக் கண்டு அதிர்ச்​சி​யடைந்​துள்​ளார்.

மேலும் தனக்கு தெரியாமல் எடுக்​கப்​பட்ட அந்​தரங்​கக் காட்​சிகள், தனது தாயாருடன் தவறான உறவில் இருப்​ப​துபோலச் சித்​தரிக்​கப்​பட்ட படங்​கள், சமூக ஊடகங்​களி​லிருந்து சேகரிக்​கப்​பட்ட பல பெண்​களின் புகைப்​படங்​களும் ஆபாச​மாக மாற்​றப்​பட்டு போனில் சேமிக்​கப்​பட்டு இருப்​பது தெரிந்​தது.

விவாகரத்து செய்ய முடிவு செய்​த​போது புகைப்​படங்​களை இணை​யத்​தில் பதிவேற்​றம் செய்​வ​தாகக் கணவர் மிரட்டி உள்​ளார்.

இது தொடர்​பாக முதலில் பீர்க்​கன்​காரணை காவல் நிலை​யத்​தில் புகார் அளித்​த ​போது, போலீ​ஸார் முறை​யாக விசா​ரிக்​க​வில்லை என்​றும், மாறாக குற்​றம்​சாட்​டப்​பட்​ட​வருக்கு ஆதர​வாக செயல்​பட்​டனர் என்​றும் கூறப்​படு​கிறது.

இதையடுத்து காவல் ஆணை​யர் அமல்​ராஜிடம் புகார் தெரி​விக்​கப்​பட்​டது. அவரது உத்​தர​வின்​பேரில் போலீ​ஸார் வழக்​குப்​ப​திவு செய்து விசா​ரணை நடத்தி நிரஞ்​சன் சர்​மாவைக் கைது செய்து சிறை​யில் அடைத்​தனர்.

இதற்​கிடையே புகார் அளிக்க வந்த பெண்​ணிடம் அநாகரி​க​மான முறை​யில் நடந்​து​கொண்​ட​தாகக் கூறப்​படும் சம்​பந்​தப்​பட்ட காவல் அதி​காரி மீதும் துறை ரீதி​யான நட​வடிக்கை எடுக்க வேண்​டும் என்று பாதிக்​கப்​பட்ட தரப்​பினர் வலியுறுத்​தி​யுள்​ளனர்.

<div class="paragraphs"><p>நிரஞ்சன் சர்மா </p></div>
நுங்கம்பாக்கத்தில் நள்ளிரவில் பயங்கரம்: கார், பைக்குகள் மீது பெட்ரோல் குண்டு வீசிய கும்பல் கைது

X