சென்னை | மனைவி நடத்தையை சந்தேகித்து கொலை செய்த கணவர் கைது

சத்தம் போட்டதால் மகளையும் கொலை செய்தார்
சென்னை | மனைவி நடத்தையை சந்தேகித்து கொலை செய்த கணவர் கைது
Updated on
1 min read

சென்னை: மனை​வி, மகளை கொலை செய்த காவலா​ளியை போலீ​ஸார் கைது செய்​தனர். சென்னை திருவிக நகரைச் சேர்ந்​தவர் சீனி​வாசன் (47). தனி​யார் நிறு​வனம் ஒன்​றில் காவலா​ளி​யாகப் பணி​யாற்றி வரு​கிறார்.

இவரது மனைவி சிவரஞ்​சனி (43). டெய்​ல​ரான இவர் வீட்​டிலேயே துணி தைத்து வந்​தார். இந்த தம்​ப​திக்கு 10-ம் வகுப்பு தேர்​வெழு​தி​யுள்ள பிரணவ் (16) என்ற மகனும், 4-ம் வகுப்பு படித்த ஜெயஹரிணி (9) என்ற மகளும் உள்​ளனர்.

வீட்​டின் கீழ்த்​தளத்​தில் சீனி​வாசனின் தாய் மைதிலி​யும், மேல் தளத்​தில் சீனி​வாசன் குடும்​பத்​துட​னும் வசித்​து​வந்​தனர். நேற்று முன்​தினம் இரவுப் பணி முடிந்து வீட்​டுக்கு வந்த சீனி​வாசன் மனை​வி, மகளு​டன் தூங்​கி​னார். பாட்டி மைதிலி​யுடன் பேரன் பிரணவ் தூங்​கி​னார்.

இந்​நிலை​யில் நள்​ளிர​வில் கணவன், மனைவி இடையே வாய்த்​தக​ராறு ஏற்​பட்​டுள்​ளது. இதனால் ஏற்​பட்ட ஆத்​திரத்​தில் கத்​தி​யால் மனை​வி கழுத்தை அறுத்​துள்​ளார். இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த மகள் கதறி​னார். உடனே அவரது கழுத்​தை​யும் அறுத்​து​விட்டு சீனி​வாசன் வீட்​டை​விட்டு ஓடி​விட்​டார்.

பின்​னர் நேற்று அதி​காலை, தாய் மைதிலிக்கு போன் செய்​து, நான் மனை​வி, மகளை கொலை செய்​து​விட்​டேன் என்று கூறி​விட்டு இணைப்​பைத் துண்​டித்​துள்​ளார். அதிர்ச்சி அடைந்த அவர் உடனடியாக மேலே சென்று பார்த்​த​போது அங்கு மரு​மகள் சிவரஞ்​சனி, பேத்தி ஹரிணி கழுத்து அறு​பட்ட நிலை​யில் சடல​மாகக் கிடந்​தனர்.

தகவலறிந்த திருவிக நகர் போலீ​ஸார் விரைந்து சென்று தாய், மகள் உடல்​களைக் கைப்​பற்றி பிரேதப் பரிசோதனைக்​காக ஸ்டான்லி அரசு மருத்​து​வ​மனைக்கு அனுப்பி வைத்​தனர். பின்​னர் திரு​முல்​லை​வாயலில் பதுங்​கி​யிருந்த சீனி​வாசனைக் கைது செய்​தனர்.

சீனி​வாசன் கடந்த 2 ஆண்​டு​களாக மனநலப் பிரச்​சினை​யால் பாதிக்​கப்​பட்​டுள்​ளார். இதற்​காக சிகிச்​சை​யும் பெற்று வந்​துள்​ளார். மனைவி சிவரஞ்​சனி​யின் நடத்​தை​யில் சீனி​வாசன் சந்​தேகம் அடைந்​துள்​ளார்.

ஒரு​வரை சுட்​டிக்​காட்டி அவருடன் மனை​வியை இணைத்​துப் பேசி​யுள்​ளார். சம்​பவத்​தன்று இரவு கணவன், மனைவி இடையே வழக்​கம்​போல் தகராறு ஏற்​பட்​டுள்​ளது. இதனால் மேலும் ஆத்​திரம் அடைந்த சீனி​வாசன் மனை​வியை கொலை செய்​துள்​ளார். இதைக் கண்டு கதறிய மகளை​யும் கொலை செய்​தார். பாட்​டி​யுடன் மகன் தூங்​கிய​தால் உயிர் தப்​பிய​தாக போலீ​ஸார் தெரி​வித்​தனர்.

சென்னை | மனைவி நடத்தையை சந்தேகித்து கொலை செய்த கணவர் கைது
வணிக காஸ் சிலிண்டர் தட்டுப்பாடு எதிரொலி: ஓட்டல்களில் விறகு பயன்பாடு அதிகரிப்பால் விலை உயர்வு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in