சென்னை விமான நிலையத்தில் ஜெர்மனி பயணியிடம் இருந்து ஜிபிஎஸ் கருவி பறிமுதல்

சென்னை விமான நிலையத்தில் ஜெர்மனி பயணியிடம் இருந்து ஜிபிஎஸ் கருவி பறிமுதல்
Updated on
1 min read

சென்னை: இண்​டிகோ ஏர்​லைன்ஸ் பயணி​கள் விமானம் சென்​னை​யில் இருந்து அந்​த​மானுக்கு நேற்று புறப்பட தயா​ரானது. அந்த விமானத்​தில் பயணம் செய்ய வந்த பயணி​களை​யும், அவர்​களின் உடமை​களை​யும் விமான நிலைய பாது​காப்பு அதி​காரி​கள் சோதனை செய்து அனுப்பி கொண்​டிருந்​தனர்.

அப்​போது, ஜெர்மனி நாட்டை சேர்ந்த லூயிஸ் ஆண்ட்​ரூஸ்(45) என்​பவர் அந்த விமானத்​தில் செல்ல வந்​தார். அவருடைய உடமைகளை சோதனை செய்த போது, உடமைக்​குள் ஜிபிஎஸ் கருவி ஒன்று இருந்​தது.

இந்​திய விமான பாது​காப்பு சட்ட விதி​களின்​படி, ஜிபிஎஸ் கரு​வியை விமான பயணி​கள், தங்​களு​டன் எடுத்து செல்​லக் கூடாது என்ற விதி​முறை இருப்​ப​தால், அந்த பயணி​யிடம் அதி​காரி​கள் விசா​ரித்​தனர்.

அப்​போது அவர், ஒரு மாதத்​துக்கு முன்பு ஜெர்​மனி​யில் இருந்து சென்​னைக்கு சுற்​றுலா பயணி​யாக வந்​தேன். தமிழகத்​தில் பல்​வேறு பகு​தி​களை சுற்றி பார்த்​து​விட்​டு, அந்​த​மானுக்கு சுற்​றுலா செல்​கிறேன்.

ஜெர்​மனி​யில் இருந்து வரும் போதே, இந்த ஜிபிஎஸ் கரு​வியை எடுத்து வந்​தேன். அப்​போது விமான நிலை​யத்​தில், இந்த கருவிக்கு தடை விதிக்​க​வில்லை என்று தெரி​வித்​தார்.

அவரது விளக்​கத்தை ஏற்​காத அதி​காரி​கள், அவரது பயணத்தை ரத்து செய்​து, அவரை​யும், ஜிபிஎஸ் கரு​வியை​யும் விமான நிலைய போலீ​ஸாரிடம் ஒப்​படைத்​தனர். இது தொடர்​பாக, போலீ​ஸார் வழக்கு பதிந்து வி​சாரித்து வருகின்றனர்.

சென்னை விமான நிலையத்தில் ஜெர்மனி பயணியிடம் இருந்து ஜிபிஎஸ் கருவி பறிமுதல்
சிறுசேரியில் சிப்காட் சுற்றுச்சூழல் பூங்காவை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in