இலங்கை கடற்பகுதியில் ரூ.10 கோடி தங்கம் பறிமுதல்

கோப்புப் படம்

கோப்புப் படம்

Updated on
1 min read

ராமேசுவரம்: இலங்கை​ யாழ்ப்​பாணம் மாத கல் கடற்​பகு​தி​யில் சந்​தேகப்படும்​படி​யாக நின்​று கொண்​டிருந்த படகை சோதனை செய்த இலங்கை கடற்படை அதில் மறைத்து வைத்திருந்த 6 கிலோ 85 கிராம் தங்​கக்​கட்​டிகளை பறி​முதல் செய்​து 2 பேரை கைது செய்​தனர்.

அவர்களையும், பறி​முதல் தங்​கத்​தை​யும் அந்​நாட்டு சுங்க அதி​காரி​களிடம் கடற்​படை​யினர் ஒப்​படைத்​தனர். கைது செய்​யப்​பட்ட 2 பேரும் யாழ்ப்​பாணம் மாவட்​டத்​தைச் சேர்ந்​தவர்​கள் என முதற்​கட்ட விசா​ரணை​யில் தெரிய​வந்​துள்​ளது.

இந்த தங்​கக் கடத்​தலின் பின்​னணி​யில் தமிழகம் மற்​றும் இலங்கையைச் சார்ந்​தோர் உள்​ள​தாக அந்​நாட்டு கடற்​படை​யினரும், சுங்​கத்​துறை​யினரும் விசா​ரித்து வரு​கின்​றனர்.

முதற்​கட்ட விசா​ரணை​யில் இலங்கையிலிருந்து தமிழகத்​துக்கு கடத்​து​வதற்​காக இத்​தங்​கத்தை கொண்​டு​வந்​த​தாக தெரிய​வந்​துள்​ளது. பறி​முதல் செய்​யப்​பட்ட தங்​கத்​தின் இந்​திய மதிப்பு சுமார் ரூ.10 கோடி என தெரிவிக்கப்பட்டுள்ளது.

<div class="paragraphs"><p>கோப்புப் படம்</p></div>
9 கோயில்களுக்கு காணிக்கையாக வரப்பெற்ற 300 கிலோ தங்கம்: மும்பை உருக்காலைக்கு அனுப்பிவைப்பு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in