சென்னை விமான நிலையத்தில் ரூ.4 கோடி தங்கம் பறிமுதல்: 6 பேர் கைது

சென்னை விமான நிலையத்தில் ரூ.4 கோடி தங்கம் பறிமுதல்: 6 பேர் கைது
Updated on
1 min read

சென்னை: சென்னை விமான நிலை​யத்​தில் ரூ.4 கோடி மதிப்​புள்ள தங்​கம் பறி​முதல் செய்​யப்​பட்​டது. தங்​கத்தை கடத்தி வந்த 2 பயணி​கள், உதவி​யாக இருந்த 2 சுங்​கத்​துறை ஊழியர்​கள், எக்​ஸ்ரே அறை​யின் 2 ஊழியர்​கள் கைது செய்​யப்​பட்​டனர்.

துபா​யில் இருந்து இலங்கை வழி​யாக லங்​கன் ஏர் லைன்ஸ் பயணி​கள் விமானம் சென்​னைக்கு நேற்று வந்​தது. அந்த விமானத்​தில் வந்த பயணி​களை​யும், அவர்​களின் உடைமை​களை​யும் சுங்​கத்​துறை அதி​காரி​கள் சோதனை செய்து அனுப்​பிக் கொண்​டிருந்​தனர்.

அப்​போது இலங்​கை​யைச் சேர்ந்த 2 பயணிகள் மீது அதி​காரி​களுக்கு சந்​தேகம் ஏற்​பட்​டது. அவர்​களை அழைத்​துச் சென்று எக்​ஸ்ரே எடுத்து வரு​மாறு 2 சுங்​கத்​துறை ஊழியர்​களிடம் ஒப்​படைத்​தனர்.

அவர்​கள் இரு​வரும் பயணி​களை எக்​ஸ்ரே எடுக்​காமல், பழைய ரிசல்ட்​களை கொண்டு வந்து உடலில் ஒன்​றும் இல்லை என்று கொடுத்​தனர்.

முன்​கூட்​டியே கிடைத்த ரகசிய தகவலின்​படி, இதை கவனித்​துக் கொண்​டிருந்த மத்​திய வரு​வாய் புல​னாய்​வுத்​துறை அதி​காரி​கள், 2 பயணி​களை​யும் ஊழியர்​களை​யும் அழைத்​துச் சென்று எக்​ஸ்ரே எடுத்து பார்த்​த​தில், பயணி​களின் ஆசன வாய்க்​குள் தங்​கக் கட்​டிகளை மறைத்து வைத்​திருந்​தது தெரிய​வந்​தது.

இதையடுத்​து, ரூ.4 கோடி மதிப்​புள்ள 2.6 கிலோ தங்​கத்தை பறி​முதல் செய்த அதி​காரி​கள், 2 பயணி​கள், 2 சுங்​கத்​துறை ஊழியர்​கள் மற்​றும் எக்​ஸ்ரே அறை​யின் 2 ஊழியர்​கள் என 6 பேரை​யும் கைது செய்து விசா​ரணை நடத்​தினர். தொடர்ந்​து, 6 பேரும் நீதி​மன்​றத்​தில் ஆஜர்​படுத்​தப்​பட்டு சிறை​யில் அடைக்​கப்​பட்​டனர்​.

சென்னை விமான நிலையத்தில் ரூ.4 கோடி தங்கம் பறிமுதல்: 6 பேர் கைது
சென்னை கோட்டத்தில் 118 ரயில் நிலையங்களில் சக்கர நாற்காலி வசதி

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in