சென்னை ரயிலில் ரூ.2 கோடி தங்கம் சிக்கியது

சென்னை ரயிலில் ரூ.2 கோடி தங்கம் சிக்கியது
Updated on
1 min read

சென்னை: சென்னை பெரம்​பூர் ரயில் நிலை​யத்​தில் ஆர்​பிஎஃப் காவல் ஆய்​வாளர் அருண்​கு​மார் தலை​மை​யில் ஆர்​பிஎஃப் போலீ​ஸார், ரயில்வே போலீஸார் இணைந்​து, நேற்று கண்​காணிப்பு பணி​யில் ஈடு​பட்​டிருந்​தனர்.

அப்​போது, கர்​நாடகா மாநிலம் மைசூரு அசோகபுரத்​தில் இருந்து பெரம்​பூர் வழி​யாக சென்னை சென்ட்​ரல் நோக்கி இயக்​கப்​பட்ட ஒரு விரைவு ரயில் வந்​தது.

பெரம்​பூர் ரயில் நிலை​யத்தை அந்த ரயில் அடைந்​த​போது, அதில் இருந்து இறங்​கியபயணி​ ஒருவர் தப்பி ஓட முயன்றார் அவரை மடக்கி பிடித்​து, அவரது பையை சோதித்த​ போது, அதில் நகைகள், தங்​கக்​கட்​டிகள் இருந்​தன.

அதாவது,1.369 கிலோ எடைக்​கொண்ட தங்க கட்​டிகள், நகைகள் இருந்​தன. இதன்​ம​திப்பு ரூ.2 கோடியே 39 ஆயிரத்து 356 ஆகும். இந்த தங்​கத்​துக்​கான உரிய ஆவணம் எது​வும் அவரிடம் இல்​லை.

இதையடுத்து, அவரை ஆர்​பிஎஃப் காவல் நிலை​யத்​துக்கு அழைத்து வந்து விசா​ரித்​த​ போது, அந்​தநபர், பெங்​களூரு​வைச் சேர்ந்த அபிஷேக் (45) என்​பதும், சட்​டப்​பூர்வ ஆவணங்​கள் இல்​லாமல் அனு​ம​தி​யின்றி தங்க கட்​டிகள், தங்​கம் ஆபரங்​கள் எடுத்​து​வந்​தது தெரிய​வந்​தது. இதையடுத்​து, பறி​முதல் செய்​யப்​பட்ட தங்​கம் சென்னை வரு​மான வரித்​துறையிடம் ஒப்​படைக்​கப்​பட்​டது.

சென்னை ரயிலில் ரூ.2 கோடி தங்கம் சிக்கியது
முதல்வர் விஜய் மற்றும் குடும்பத்தினர் குறித்து அவதூறு பேச்சு: நயினார் நாகேந்திரனுக்கு அரசியல் தலைவர்கள் கண்டனம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in