கோவை விமான நிலையத்தில் ரூ.1.15 கோடி தங்கம் பறிமுதல்

கோவை விமான நிலையத்தில் ரூ.1.15 கோடி தங்கம் பறிமுதல்
Updated on: 
1 min read

கோவை: விமானத்​தில் ரூ.1.15 கோடி மதி்ப்புள்ள தங்​கத்தை கடத்தி வந்த பெண் பயணி​யிடம் போலீ​ஸார் விசா​ரணை நடத்தி வரு​கின்​றனர்.

ஷார்​ஜாவில் இருந்து எப்​எல்டி ‘ஜி-9410’ என்ற விமானம் நேற்று கோவை வந்​தது. அதில் வந்த பயணிகளை சுங்​கத்​துறை அதி​காரி​கள் சோதனை செய்து அனுப்​பிக் கொண்​டிருந்​தனர். அப்​போது பெண் பயணி ஒரு​வரை திருச்சி சுங்​கத்​துறை நுண்​ணறி​வுப் பிரிவு அதி​காரி​கள் சந்​தேகத்​தின் பேரில் நிறுத்தி, தீவிர சோதனை மேற்​கொண்​டனர்.

அவர் தனது உள்​ளாடைகளுக்​குள் பசை (பேஸ்ட்) வடி​வில் மறைத்து வைத்​திருந்த 808.27 கிராம் எடையுடைய 24 காரட் தங்​கத்​தைக் கண்​டறிந்து பறி​முதல் செய்​தனர். இதன் மதிப்பு ரூ.1.15 கோடி என தெரி​விக்​கப்​பட்​டுள்​ளது. இது தொடர்​பாக அந்​தப் பெண் பயணி​யிடம் சுங்​கத்​துறை அதி​காரி​கள் தீவிர விசா​ரணை நடத்தி வரு​கின்​றனர்.

கோவை விமான நிலையத்தில் ரூ.1.15 கோடி தங்கம் பறிமுதல்
அதிமுக பிரமுகர் எரித்து கொல்லப்பட்ட வழக்கு: திமுக பிரமுகர்கள் 6 பேருக்கு ஆயுள் தண்டனை

X