கார் ஏற்றி இளம்பெண் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் சிகிச்சையில் இருந்த சிறுமியும் உயிரிழப்பு

கார் ஏற்றி இளம்பெண் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் சிகிச்சையில் இருந்த சிறுமியும் உயிரிழப்பு
Updated on
1 min read

சென்னை: மது பாரில் ஏற்​பட்ட தகராறில் கார் ஏற்றி இளம்பெண் கொலை செய்​யப்​பட்ட சம்​பவத்தில் பலத்த காயங்​களு​டன் சிகிச்சை பெற்று வந்த சிறுமி​யும் சிகிச்சை பலனின்றி உயி​ரிழந்​தார்.

விழுப்​புரம் மாவட்​டம், அனிச்​சங்​குப்​பத்​தில் உள்ள இலங்கை தமிழர் மறு​வாழ்வு முகாமில் பெற்​றோருடன் வசித்​தவர் யான்சி (19). பிளஸ்-2 முடித்​து​விட்டு கல்​லூரி படிப்​புக்​குத் தயா​ரா​னார். இந்​நிலை​யில் இன்​ஸ்​டாகி​ராம் மூலம் நட்​பான தோழியைப் பார்க்க கடந்த 10 நாட்​களுக்கு முன் சென்னை வந்​தார்.

பின்​னர் தனது 17 வயது தோழி உள்​ளிட்ட மேலும் சிலருடன் கடந்த சனிக்​கிழமை இரவு 11 மணி​யள​வில் சென்னை கோயம்​பேட்​டில் உள்ள பிரபல​ நட்​சத்​திர ஓட்​டல் மது​பாருக்​குச் சென்​றார்.

அங்கு திமுக கொடி கட்​டிய காரில் வந்த இளைஞர்​கள் சிலருக்​கும், இளம் பெண்​ணுக்​கும் இடையே நடனம் ஆடு​வ​தில் தகராறு ஏற்​பட்​டுள்​ளது. மேலும் காரில் வந்​தவர்​கள் இடுப்பை கிள்​ளியதோடு, தனிமைக்​கும் அழைத்​த​தாக கூறப்​படு​கிறது.

இதனால் தகராறு முற்றி அங்​கிருந்த பவுன்​சர்​கள் இரு தரப்​பை​யும் வெளி​யேற்​றினர். வெளியே வந்த பின்​னரும், அவர்​கள் சண்​டை​யிட்​டனர். அப்​போதும் பவுன்​சர்​கள் தலை​யிட்டு சமா​தானம் செய்து அனுப்​பி​ வைத்​துள்​ளனர்.

காரில் வந்த இளைஞர்​கள் அந்த ஆத்​திரத்​திலேயே இருந்​துள்​ளனர். அப்​போது ஒரே ஸ்கூட்​டரில் சென்ற யான்​சி, தோழி​யான சிறுமி மற்​றும் நண்​பர்​கள் என 4 பேர் மீதும் அதிவேக​மாக அடுத்​தடுத்து இரு​முறை இடித்​துத் தள்​ளினர். இதில் பலத்த காயம் அடைந்த யான்சி சம்பவ இடத்​திலேயே உயி​ரிழந்​தார்.

சிறுமி உள்​ளிட்ட 3 பேர் காயம் அடைந்​தனர். சிறுமிக்கு பலத்த காயம் ஏற்​பட்​ட​தால் கீழ்ப்​பாக்​கம் அரசு மருத்​து​வ​மனை​யில் சிகிச்சை பெற்று வந்​தார். இந்​நிலை​யில் கார் ஏற்றி இளம் பெண் கொலை செய்​யப்​பட்ட வழக்​கில் கல்​லூரி மாணவர்​கள் உட்பட 7 பேரை கோயம்​பேடு பேருந்து நிலைய போலீ​ஸார் கைது செய்து சிறை​யில் அடைத்​தனர். சம்​பந்​தப்​பட்ட பாருக்​கும் சீல் வைக்​கப்​பட்​டது.

இது ஒரு​புறம் இருக்க காரில் வந்​தவர்​களை நோக்கி வேறு ஒரு கும்​பல் கல்​வீசித் தாக்​குதல் நடத்தி தப்​பியது. யான்சி தரப்​பினர்​தான் தாக்​கி​விட்டு தப்​புவ​தாக தவறு​தலாக நினைத்த காரில் வந்​தவர்​கள், காரால் மோதி யான்​சியை கொலை செய்​த​தாக தகவல் வெளி​யானது.

இந்​நிலை​யில் சம்​பவத்​தில் படு​கா​யத்​துடன் மருத்​து​வ​மனை​யில் சிகிச்சை பெற்று வந்த சிறுமி சிகிச்சை பலனின்றி நேற்று அதி​காலை உயி​ரிழந்​தார்.

இதனால் கார் ஏற்றி கொலை செய்​யப்​பட்​ட​வர்​களின் எண்​ணிக்கை 2 ஆக உயர்ந்​துள்​ளது. இந்த விவ​காரம் தொடர்​பாக போலீ​ஸார்​ தொடர்ந்​து வி​சா​ரித்​து வரு​கின்​றனர்​.

கார் ஏற்றி இளம்பெண் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் சிகிச்சையில் இருந்த சிறுமியும் உயிரிழப்பு
பேச்சு சுதந்திர உரிமை பாதுகாக்கப்பட வேண்டும்: அமைச்சர் ராஜ்மோகன் உறுதி

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in