திருச்சியில் சிறுமிக்கு மது கொடுத்து பாலியல் துன்புறுத்தல்: கார் ஓட்டுநர் போக்சோ வழக்கில் கைது

திருச்சியில் சிறுமிக்கு மது கொடுத்து பாலியல் துன்புறுத்தல்: கார் ஓட்டுநர் போக்சோ வழக்கில் கைது
Updated on
1 min read

திருச்சி: சிறுமியை காரில் அழைத்​துச் சென்று மது கொடுத்து பாலியல் துன்​புறுத்​தலில் ஈடு​பட்ட கார் ஓட்​டுநரை போலீ​ஸார் போக்சோ வழக்​கில் கைது செய்​தனர்.

திருச்சி காந்தி மார்க்​கெட் காவல்​நிலைய வரம்புக்​குட்​பட்ட பகு​தி​யைச் சேர்ந்​தவர் 16 வயது சிறுமி. இவர் 9-ம் வகுப்​புவரை படித்​து​விட்டு பள்​ளிக்கு செல்​லாமல் வீட்​டில் இருந்​துள்​ளார். இந்த சிறுமி, மூன்​றாம் பாலினத்​தவ​ராக உள்ள தனது சகோ​தரரை பார்க்க அதே பகு​தி​யில் உள்ள மற்​றொரு மூன்​றாம் பாலினத்​தவர் வீட்டுக்கு நேற்று முன்​தினம் சென்​றுள்​ளார். அப்​போது, அங்கு காரில் வந்த சிவகங்கை மாவட்​டம் திரு​புவனம் பகு​தி​யைச் சேர்ந்த கார் ஓட்​டுந​ரான மாரிச்​செல்​வம் (45) என்​பவர், வீட்டிலிருந்த சிறுமி​யிடம் பேச்​சுக் கொடுத்து அவரை காரில் அழைத்​துச் சென்​றுள்​ளார். வழியில், சிறுமிக்கு மது​கொடுத்து பாலியல் துன்​புறுத்​தல் அளித்​துள்ளார்.

பின்​னர், சிறுமியை தாராநல்​லூர் கீரைகடை பஜார் பகு​தி​யில் இறக்​கி​விட்​டு சென்​று​விட்​டார். காரில் இருந்து இறங்​கிய சிறுமி சாலை​யில் மயங்கி விழுந்​தார். இதைக்​கண்டு அப்பகுதி மக்கள் அதிர்ச்​சி​யடைந்தனர். சிறிதுநேரத்​தில் காரில் மீண்​டும் அங்கு வந்த மாரிச்​செல்​வத்தை பொது​மக்​கள் பிடித்​து, அவரை தாக்கியதுடன், காந்தி மார்க்​கெட் போலீ​ஸாரிடம் ஒப்​படைத்​தனர். மேலும், பாதிக்​கப்​பட்ட சிறுமியை திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்​தனர்.

தகவலறிந்து அரசு மருத்​து​வ​மனை முன்பு நேற்று முன்​தினம் இரவு திரண்ட சிறுமி​யின் உறவினர்​கள், சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்​தவர்​களை கைது செய்​யக் கோரி, சாலை மறியலில் ஈடு​பட்​டனர். அவர்​களிடம் போலீ​ஸார் நடத்​திய பேச்​சு​வார்த்​தை​யில் உடன்​பாடு ஏற்​பட்​டதையடுத்​து, மறியலை கைவிட்டனர்.

பொது​மக்​கள் தாக்​கிய​தில் மாரிச்​செல்​வத்​தின் காலில் எலும்பு முறி​வும், உடலில் காயங்​களும் இருந்​த​தால், அவரை போலீ​ஸார் திருச்சி அரசு மருத்​து​வ​மனை​யில் சேர்த்​தனர்.

இந்​நிலை​யில், கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீ​ஸார் மாரிச்​செல்​வம் மீது ஆள் கடத்​தல், போக்சோ சட்​டம் உள்​ளிட்ட பிரிவு​களி​லும், எஸ்​.சி. எஸ்​.டி. வன்​கொடுமை தடுப்​புச் சட்​டத்​தின் கீழும் வழக்​குப் பதிவு செய்​து, அவரை கைது செய்​தனர்.

முன்​னாள் அமைச்​சர் கண்​டனம்

இச்​சம்​பவத்துக்கு முன்​னாள் அமைச்​சர் அன்​பில் மகேஸ் பொய்​யாமொழி கண்​டனம் தெரி​வித்​துள்​ளார். திருச்​சி​யில் சிறுமி பாலியல் வன்​கொடுமை எனும் செய்​தியை கேட்​கும்​போதே மனம் நடுங்​கு​கிறது. தமிழகம் முழு​வதும் இந்த ஓலம் கேட்​டுக்​கொண்டே இருக்​கிறது. இதற்​கு, முதல்​வர் உடனடி​யாகத் தீவிர நடவடிக்​கையை எடுக்க வேண்​டும். மீண்​டும் முந்​தைய ஆட்​சியை குறை சொல்​லி, ஆக்​ரோஷ​மாகப் பேசி மக்​களை திசை​திருப்​பாமல், அரசு இயந்​திரத்​தைப் பயன்​படுத்​துங்​கள். குற்​ற​வாளி​கள் கடுமை​யாகத் தண்​டிக்​கப்பட வேண்​டும் என்று அவர் தெரி​வித்​துள்​ளார்.

திருச்சியில் சிறுமிக்கு மது கொடுத்து பாலியல் துன்புறுத்தல்: கார் ஓட்டுநர் போக்சோ வழக்கில் கைது
தமிழகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை 100 பேருடன் பெயரளவில் செயல்படுகிறது: உயர் நீதிமன்றம் வேதனை

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in