மேலும் 2 வழக்கில் ஜெம் வீரமணி கைது

மேலும் 2 வழக்கில் ஜெம் வீரமணி கைது
Updated on: 
1 min read

சென்னை: ஜெம் வீரமணியை மேலும் 2 போக்சோ வழக்கு களில் கைது செய்த சிறப்பு புலனாய்வுக்குழு போலீஸார் சென்னை போக்சோ சிறப்பு நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

அவரை வரும் நவ.10 ரிமாண்ட் செய்து நீதிபதி எஸ்.பத்மா உத்தரவிட்டுள்ளார்.

சிறுமிகளை பாலியல் ரீதியாக வன்கொடுமை செய்ததாக கைதான ஜெம் வீரமணி மற்றும் அவருக்கு உடந்தையாக செயல்பட்ட சாந்தி, அவரது கணவர் மகேந்திர சிம்மன் மற்றும் வீரமணியின் உதவியாளர் கணேசன் ஆகியோர் சிறையி்ல் அடைக்கப்பட்டுள்ளனர்.

வீரமணி மீது சிறப்பு புலனாய்வுக் குழு போலீஸார் இதுவரை 8 போக்சோ வழக்குகளை பதிவு செய்துள்ளனர். இதில் 4 வழக்குகளில் ஏற் கெனவே வீரமணி கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில் மேலும் 2 போக்சோ வழக்குகளில் வீரமணியை போலீஸார் நேற்று கைது செய்து சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

அவரை வரும் நவ.10 வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிபதி எஸ்.பத்மா உத்தரவிட்டார். இதுவரை 6 வழக்கு களில் வீரமணி கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும் 2 வழக்கில் ஜெம் வீரமணி கைது
திருமண மண்டபங்களில் விற்பனைக் கண்காட்சி நடத்த அரசு தடை விதிக்க வேண்டும்: தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை கோரிக்கை

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in