திருமண மண்டபங்களில் விற்பனைக் கண்காட்சி நடத்த அரசு தடை விதிக்க வேண்டும்: தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை கோரிக்கை

எஸ்.சவுந்​தர்​ராஜன்.

எஸ்.சவுந்​தர்​ராஜன்.

Updated on: 
1 min read

சென்னை: திரு​மண மண்​டபங்​களில் பண்​டிகைக் கால விற்​பனைக் கண்காட்சிகளை நடத்த தடை விதிக்க வேண்​டும் என்று முதல்​வருக்கு தமிழ்​நாடு வணிகர் சங்​கங்​களின் பேரவை கோரிக்கை விடுத்​துள்​ளது.

இது​தொடர்​பாக முதல்​வர் விஜய்க்கு தமிழ்​நாடு வணிகர் சங்​கங்​களின் பேரவைத் தலை​வர் எஸ்.சவுந்​தர்​ராஜன் அனுப்​பிய மனுவில் கூறியுள்​ள​தாவது: தீபாவளி, பொங்​கல் போன்ற பண்​டிகைக் காலங்​களின்​போது சென்னை, மதுரை, கோவை, திருச்சி, சேலம் உள்​ளிட்ட முக்​கிய நகரங்​கள், பேரூராட்​சிகள், கிராமப்​புறங்​களில் உள்ள திரு​மண மண்​டபங்​களை, வாடகைக்கு எடுத்து, வெளி மாநிலங்​கள் மற்​றும் பெருநகரங்​களைச் சேர்ந்த சில வணிக நிறு​வனங்​கள் விற்​பனைக் கண்​காட்சி நடத்து​கின்​றன.

அங்கு ரெடிமேட் ஆடைகள், ஜவுளி ரகங்​கள், வீட்டு உபயோகப் பொருட்​கள் போன்​றவற்றை மொத்​த​மாக குவித்து தள்​ளு​படி விற்​பனை என்ற பெயரில் நேரடி வர்த்​தகத்​தில் ஈடு​படு​கின்​றனர்.

இத​னால் பாரம்​பரிய​மாக வணிகம் செய்​யும் உள்​ளூர் வணிகர்​கள் பாதிக்​கப்​படுகின்​றனர். சுப நிகழ்ச்​சிகள், சமூக கூட்​டங்​களுக்​காக மட்​டுமே உள்​ளாட்சி அமைப்​பு​களிடம் அனுமதி பெற்று இயங்​கும் கட்​டிடங்​கள்​தான் திரு​மண மண்​டபங்​கள்.

வணிக வளாகங்​கள்​போல அவற்றை தற்​காலிக விற்​பனை சந்​தையாகப் பயன்​படுத்​து​வது விதி​களுக்கு முரணானது. எனவே, திரு​மண மண்​டபங்​களில் வர்த்​தக ரீதி​யான தற்​காலிக கண்​காட்​சிகள், வணிகப் பொருள் விற்​பனைக்கு உள்​ளாட்சி அமைப்​பு​கள், காவல் துறை மூலம் அனுமதி வழங்​கக் கூடாது.

இது​தொடர்​பாக தமிழக அரசு உடனடி​யாக அரசாணை பிறப்​பித்து உத்தர​ விட வேண்​டும். இவ்​வாறு அதில் கூறப்​பட்​டுள்​ளது.

<div class="paragraphs"><p>எஸ்.சவுந்​தர்​ராஜன்.</p></div>
தமிழகத்தில் ஆட்டோ கட்டணம் உயர்வு: குறைந்த பட்சம் ரூ.50 ஆக நிர்ணயம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in