சென்னை விமான நிலையத்தில் ரூ.4 கோடி மதிப்புள்ள கஞ்சா பறிமுதல்

சென்னை விமான நிலையத்தில் ரூ.4 கோடி மதிப்புள்ள கஞ்சா பறிமுதல்
Updated on
1 min read

சென்னை: தாய்​லாந்து நாட்​டில் இருந்து விமானங்​கள் மூலம் சென்​னைக்கு அதிக அளவில் போதைப்​பொருள் கடத்தி வரு​வது அதி​கரித்​துள்​ளது. அதனால், சென்னை விமான நிலை​யத்​தில் சுங்​கத்​துறை அதி​காரி​கள் தீவிர கண்​காணிப்​பில் ஈடு​பட்​டுள்​ளனர்.

நேற்​று​ முன்​தினம் நள்​ளிர​வில் தாய்​லாந்து தலைநகர் பாங்​காக்​கில் இருந்து சென்னை வந்த விமானத்​தில் வந்​திறங்​கிய பயணி​களை​யும், அவர்​களின் உடைமை​களை​யும் அதி​காரி​கள் சோதனை செய்​தனர்.

அப்​போது, அந்த விமானத்​தில் வந்த தமிழகத்தை சேர்ந்த 2 இளைஞர்​கள் மீது அதி​காரி​களுக்கு சந்​தேகம் ஏற்​பட்​டது. சுற்​றுலா விசா​வில் தாய்​லாந்து சென்​று​விட்டு திரும்​பிய அவர்​கள் வைத்​திருந்த சூட்​கேஸ்​களை திறந்து அதி​காரி​கள் சோதனை செய்தபோது, அதில் ரூ.4 கோடி மதிப்​புள்ள 4 கிலோ 76 கிராம் உயர்ரக ஹைட்​ரோ​போனிக் கஞ்சா போதைப்​பொருள் மறைத்து வைத்​திருந்​தது தெரிய​வந்​தது.

இதையடுத்​து, கஞ்​சாவை பறி​முதல் செய்த அதி​காரி​கள், இரு​வரை​யும் கைது செய்து விசா​ரணை நடத்​தினர். முதல்​கட்ட விசா​ரணை​யில், இரு​வரும் போதைப்​பொருள் கடத்​தல் குரு​வி​யாக செயல்​பட்​டது தெரிய​வந்​தது. அவர்​களிடம் தொடர்ந்து அதி​காரி​கள்​ வி​சா​ரணை நடத்​தி வரு​கின்​றனர்​.

சென்னை விமான நிலையத்தில் ரூ.4 கோடி மதிப்புள்ள கஞ்சா பறிமுதல்
சட்டவிரோத பணப்பரிமாற்ற புகார்: சென்னையில் 2 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in