திருப்பத்தூரில் போதையில் பள்ளி மாணவரை கொன்ற நண்பர்கள்

திருப்பத்தூரில் போதையில் பள்ளி மாணவரை கொன்ற நண்பர்கள்
Updated on
1 min read

திருப்​பத்​தூர்: சிவகங்கை மாவட்​டம் திருப்​பத்​தூர் அருகே பள்ளி மாணவரை கொலை செய்த நண்​பர்​கள் இரு​வரை போலீ​ஸார் தேடு​கின்றனர்.

திருப்​பத்​தூர் அருகே காரையூரைச் சேர்ந்​தவர் நாக​ராஜ் மகன் அஸ்​வின் (15). இவர் அரு​கே​யுள்ள அரசு உயர்​நிலைப் பள்​ளி​யில் 9-ம் வகுப்​புத் தேர்ச்சி பெற்​றிருந்​தார். கோடை விடு​முறை முடிந்து நேற்று முன்​தினம் பள்ளி திறக்​கப்​பட்ட நிலை​யில் அஸ்​வின் பள்ளி செல்​ல​வில்​லை.

அவர் தனது நண்​பர்​கள் இளந்​தமங்​கலத்​தைச் சேர்ந்த அரவிந்த், காரையூரைச் சேர்ந்த கணேசன் மற்​றும் டிப்​ளமோ பயிலும் 17 வயது சிறு​வனுடன் கீழக்​காவனிபட்டி கண்​மாய்க்​குச் சென்று மது அருந்​தி​ய​தாகக் கூறப்​படு​கிறது. பின்​னர், 4 பேரும் ஒரே இருசக்கர வாக​னத்​தில் அங்​கிருந்து புறப்​பட்​டனர். சிறிது தூரம் சென்ற நிலை​யில், 4 பேரும் இருசக்கர வாக​னத்​திலிருந்து கீழே விழுந்​தனர். இதில் அஸ்​வினுக்கு காயம் ஏற்​பட்​டது. கீழே விழுந்​தது குறித்து யாரிட​மும் சொல்ல வேண்​டாம் என்று அரவிந்த் கூறி​யுள்​ளார். ஆனால், தனக்கு காயம் ஏற்​பட்​டுள்​ள​தால் வீட்​டில் கூறு​வேன் என்று அஸ்​வின் சொன்​ன​தாகக் கூறப்​படு​கிறது.

இதனால் ஆத்​திரமடைந்த அரவிந்த், அஸ்​வினை தாக்​கி​யுள்​ளார். இதனால் அச்சமடைந்த 17 வயது சிறு​வன் அங்​கிருந்து ஓடி விட்​டார். பின்​னர், அஸ்​வின் திரும்பி வராத​தால் அந்த சிறு​வன் மீண்​டும் கண்​மாய்க்​குச் சென்று பார்த்​துள்​ளார். அப்​போது அஸ்​வின் கழுத்​தறுக்​கப்​பட்ட நிலை​யில் இறந்து கிடந்​தார். மற்ற இரு​வரை​யும் காண​வில்​லை. இதையடுத்து நள்​ளிர​வில் திருப்​பத்​தூர் காவல் நிலை​யத்​துக்​குச் சென்று அந்த சிறு​வன் தகவல் தெரி​வித்​தார்.

இதையடுத்து நேற்று அதி​காலை அங்கு சென்ற போலீ​ஸார் அஸ்​வினின் உடலைக் கைப்​பற்றி பரிசோதனைக்​காக சிவகங்கை அரசு மருத்​து​வ​மனைக்கு அனுப்பி வைத்​தனர். மாவட்​டக் காவல் கண்​காணிப்​பாளர் சிவபிர​சாத் சம்பவ இடத்​தில் வி​சா​ரணை நடத்​தி​னார். கீழச்​சிவல்​பட்டி போலீ​ஸார் வழக்​குப்​ பதிந்​து தப்​பியோடிய இரு​வரை தேடி வருகின்​றனர்.

திருப்பத்தூரில் போதையில் பள்ளி மாணவரை கொன்ற நண்பர்கள்
சீமைக் கருவேல மரங்களை அகற்றாவிட்டால் நடவடிக்கை: உயர் நீதிமன்றம் எச்சரிக்கை

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in