போலி ஆவணம் மூலம் கடன் பெற்று மோசடி: வங்கி உதவி பொது மேலாளர் உட்பட 5 பேருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை

போலி ஆவணம் மூலம் கடன் பெற்று மோசடி: வங்கி உதவி பொது மேலாளர் உட்பட 5 பேருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை
Updated on
1 min read

சென்னை: வங்கிக் கடன் மோசடி வழக்​கில் 5 பேருக்கு 10 ஆண்​டு​கள் சிறை தண்​டனை விதிக்கப்பட்டுள்​ளது.

சென்​னை​யில் உள்ள பாங்க் ஆஃப் இந்​தியா வங்​கிக் கிளை​களில் முத்​துச்​சாமி என்​பவர் கடந்த 2004-09 கால​கட்​டத்​தில் போலி ஆவணங்​கள் மூலம் ரூ.3.62 கோடி கடன் பெற்​ற​தாக வங்​கி​யின் மண்டல துணை மேலா​ளர் கடந்த 2010-ல் சிபிஐ​யிடம் புகார் கொடுத்​தார்.

புகார் விவரம் உண்மை என்​றும், போலி ஆவணங்​களை தயாரிக்க முன்​னாள் விஏஓக்​கள் தசரதன், மாணிக்​கவேலு, வரு​வாய் அலு​வலர் சிவக்​கு​மார் உடந்​தை​யாக இருந்​ததும் சிபிஐ விசா​ரணை​யில் தெரிய​வந்​தது.

வங்​கி​யின் தி.நகர் உஸ்​மான் சாலை கிளை உதவி பொது மேலா​ளர் வெங்​க​டாச்​சலம் ஆவணங்​களை சரி​பார்க்​காததும் தெரிய​வந்​தது. இதையடுத்​து, முத்​துச்​சாமி உட்பட 12 பேர் மீது வழக்குப் பதிவு செய்​தனர்.

சென்னை 11-வது கூடு​தல் சிபிஐ நீதி​மன்​றத்​தில் விசா​ரணை நடை​பெற்​றது. வழக்கு விசா​ரணை​யின்​போது முத்​துச்​சாமி, அவரது மனைவி ஜோதி உட்பட 4 பேர் கால​மாகினர். உமாபதி என்​பவர் மீதான வழக்கு தனி​யாக பிரிக்​கப்​பட்​டது.

நீதிபதி ஏ.எஸ்​.ரவி முன்பு மற்ற 7 பேர் மீதான விசா​ரணை நடந்​தது. சிபிஐ தரப்​பில் வழக்​கறிஞர் முகமது இப்​ராஹிம் ஆஜராகி குற்​றச்​சாட்​டு​களை நிரூபித்​தார்.

இதையடுத்​து, வங்கி அதி​காரி வெங்​க​டாச்​சலம், ஓய்வு பெற்ற விஏஓக்​கள் மாணிக்​கவேலு, தசரதன், வரு​வாய் அலு​வலர் சிவக்​கு​மார், இளம்​பெண் தாமரைப்பூ ஆகிய 5 பேருக்கு தலா 10 ஆண்டு சிறை தண்​டனை, தாமரைப்​பூ​வின் கணவர் தண்​ட​பாணிக்கு 7 ஆண்டு சிறை தண்​டனை விதித்​தும், மொத்​த​மாக ரூ.2.70 கோடி அபராதம் விதித்​தும், முத்​துச்​சாமி மகள் லாவண்​யாவை விடு​தலை செய்​தும் நீதிபதி தீர்ப்​பளித்​தார்​.

போலி ஆவணம் மூலம் கடன் பெற்று மோசடி: வங்கி உதவி பொது மேலாளர் உட்பட 5 பேருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை
செங்குன்றம் அருகே பட்டப்பகலில் எலக்ட்ரீஷியன் கொலை: 3 பேர் கைது

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in