செங்குன்றம் அருகே பட்டப்பகலில் எலக்ட்ரீஷியன் கொலை: 3 பேர் கைது

ரத்னவேல்பாண்டியன்

ரத்னவேல்பாண்டியன்

Updated on
1 min read

செங்​குன்​றம்: திரு​வள்​ளூர் மாவட்​டம், செங்குன்றம் அருகே உள்ளஆட்​டந்​தாங்​கல், பால​கணேசன் நகரைச் சேர்ந்​தவர் ரத்​னவேல் பாண்​டியன் (40). எலக்ட்​ரீ ஷிய​னான இவர் புழல், காவாங்​கரைபகு​தி​யைச் சேர்ந்த முனி​யாண்டி என்​பவரின் மகள்பூர்​ணி​மாவை (28) காதல்திரு​மணம் செய்​து, காவாங்​கரை பகு​தி​யில் வசித்து வந்​தார். இத்​தம்​ப​திக்கு 2 மகன்​கள் உள்​ளனர்.

இந்​நிலை​யில் கருத்து வேறு​பாடு காரண​மாக மனைவி பூர்​ணி​மாவை விட்​டுப் பிரிந்த ரத்​தினவேல் பாண்​டியன், பூர்​ணி​மா​வின் சகோ​தரர் சரவணனின் மனைவி சரண்​யாவை 2-வது திரு​மணம் செய்​து, ஆட்​டந்​தாங்​கலில் வசித்து வந்​தார்.

இந்​நிலை​யில் ரத்​னவேல் பாண்​டியன் நேற்று காலை பைக்​கில் செங்​குன்​றம் நோக்​கிச் சென்று கொண்​டிருந்​தார். அப்​போது வேக​மாக வந்த மற்​றொரு பைக் ரத்​னவேல் பாண்​டியன் மீது மோதி​யது. பின்​னர் அதில் வந்த இரு​வர் ரத்​னவேல் பாண்​டியனை கத்​தி​யால் வெட்​டி​விட்டு தப்​பியோடினர்.

படு​காயமடைந்த ரத்​னவேல் பாண்​டியனை பொது​மக்​கள் மீட்​டு, பாடிய நல்​லூர் அரசு ஆரம்ப சுகா​தார நிலை​யத்​துக்கு கொண்டு சென்​றனர். அங்கு மருத்​து​வர்​களின் பரிசோதனை​யில் ரத்​னவேல் பாண்​டியன் ஏற்​கெனவே உயி​ரிழந்​தது தெரிய​வந்​தது.

செங்​குன்​றம் போலீ​ஸார் உடலைக் கைப்​பற்றி சென்​னை, ஸ்டான்லி அரசு மருத்​து​வக் கல்​லூரி மருத்​து​வ​மனைக்கு அனுப்பி வைத்​தனர்.

பின்​னர் போலீ​ஸார் வழக்​குப் பதிவு செய்து விசா​ரணை நடத்​தி, ரத்​னவேல் பாண்​டியனின் முதல் மனைவி பூர்​ணி​மா​வின் சகோ​தரர்​களான புழல், காவாங்​கரையை சேர்ந்த சரவணன் (39), தனசேகர் (34), சித்​தப்​பா​வான எண்​ணூரை சேர்ந்த பழனி​சாமி (45) ஆகிய 3 பேரை நேற்று மாலை கைது செய்​தனர்.

கைதானவர்​களிடம் நடத்​திய விசா​ரணை​யில், “தங்கை பூர்​ணி​மா​வின் வாழ்க்​கையை கெடுத்​தது மட்​டுமல்​லாமல், தன் மனைவி சரண்​யாவை 2-வது திரு​மணம் செய்து கொண்டு தனது குடும்​பத்​தை​யும் சின்​னாபின்​ன​மாக்​கிய ரத்​னவேல் பாண்​டியனை கொலை செய்ய சரவணன் திட்​டம் தீட்​டி, தம்பி தனசேகர், சித்​தப்பா பழனி​சாமி​யுடன் சேர்ந்து கொலை செய்​துள்​ளார்​” என்​று போலீஸார் கூறினர்.

<div class="paragraphs"><p>ரத்னவேல்பாண்டியன்</p></div>
போலீஸார் குறித்து லஞ்ச புகார் தெரிவிக்க தமிழக காவல்துறையில் தனிப்பிரிவு தொடக்கம்: செல்போன் எண்களை வெளியிட்டார் டிஜிபி

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in