சென்னை அருகே கடத்தப்பட்ட மோசடி நிதி நிறுவன அதிபர் தென்காசியில் மீட்பு

சென்னை அருகே கடத்தப்பட்ட மோசடி நிதி நிறுவன அதிபர் தென்காசியில் மீட்பு
Updated on
1 min read

நாவலூர்: தமிழகத்​தில் கடந்த 2016-ம் ஆண்டு செயல்​பட்ட நியோ மேக்ஸ் நிறு​வனம், மாநிலம் முழு​வதும் 60,000-க்​கும் மேற்​பட்​டோரிடம் ரூ.8,000 கோடி வரை மோசடி செய்​த​தாக குற்​றச்​சாட்டு எழுந்​தது.

பலரிடம் பணம் பெற்​று, அதை ரியல் எஸ்​டேட் துறை​யில் முதலீடு செய்து 3 மடங்கு லாபம் தரு​வ​தாக கூறி பலரை முதலீடு செய்ய வைத்​த​தாக கூறப்​படு​கிறது. பின்​னர் நிறு​வனம் செயலிழந்த நிலை​யில், அதன் நிர்​வாகி​கள் மீது விசா​ரணை நடை​பெறுகிறது.

இந்த வழக்​கில் தொடர்​புடைய​வரும், நியோமேக்ஸ் நிறு​வனத்​தின் முன்​னாள் பங்​கு​தா​ரரு​மான சென்னை மேட​வாக்​கத்​தைச் சேர்ந்த சார்​லஸ் (56), கடந்த 27-ம் தேதி தனது கார் ஓட்​டுநர் ஷியாம் விக்​னேஷ் (30) உடன் ஓ.எம்​.ஆர். சாலை​யில் உள்ள நாவலூர் பகு​திக்கு சென்​றிருந்​தார்.

அங்கு சாலை​யோரம் காரை நிறுத்​திய சார்​லஸ், எதிரே உள்ள வணிக வளாகத்​தில் சில பொருட்கள் வாங்கி வருமாறு ஓட்​டுநரிடம் கூறி​னார். ஓட்​டுநர் 15 நிமிடங்​கள் கழித்து வந்​த​போது, சார்​லஸைக் காண​வில்​லை. காரும் இல்லை. செல்​போன் லைனும் கிடைக்கவில்லை.

இதையடுத்து ஓட்​டுநர் காவல் கட்​டுப்​பாட்டு அறைக்கு தகவல் தெரி​வித்​தார். தாழம்​பூர் போலீ​ஸார் சிசிடிவி காட்​சிகளை ஆய்வு செய்​த​போது, மற்​றொரு காரில் வந்த நால்​வர், அவரை அவரது காருடன் அழைத்​துச் செல்​வது பதி​வாகி இருந்​தது.

கடத்​தல் கும்​பல் 2 கார்​களில் பிரிந்து பயணித்​ததும், ஒரு கார் தென்​காசி நோக்​கி​யும் மற்​றொரு கார் கோவை நோக்​கி​யும் சென்​றதும் தெரிந்தது. தென்​காசி மாவட்​டத்​தில் உள்ள ஒரு பண்​ணை​யில் அடைத்து வைக்​கப்​பட்​டிருந்த சார்​லஸை தனிப்படை போலீ​ஸார் மீட்​டனர். அங்கு இருந்த தினேஷ் பாண்​டின் (34) கைது செய்யப்பட்டார்.

அவர் அளித்த தகவலின் பேரில், கோவையில் பதுங்​கி​யிருந்த கருத்​த​பாண்டி (24), ராம​நாத​புரத்​துக்கு தப்​பிச் சென்ற தினேஷ்கு​மார் (33), சபரி என்ற வேல் சபரி (26) ஆகியோரை​யும் கைது செய்​தனர்.

இந்த கும்​பல், கடந்த 7 மாதங்​களுக்கு முன்பே சார்லஸை மிரட்டி ரூ.1.40 கோடியை பறித்​துள்​ள​து. அது தொடர்பாக சார்லஸ் புகார் அளிக்காததால், தற்போது அவரை ரூ.2 கோடி கேட்டு, மிரட்டி, கடத்தியுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. அவர்களிடம் இருந்து 2 கார்களும், சார்லஸின் காரும் பறிமுதல் செய்யப்பட்டன.

சென்னை அருகே கடத்தப்பட்ட மோசடி நிதி நிறுவன அதிபர் தென்காசியில் மீட்பு
உதவி பேராசிரியர் தேர்வில் முறைகேடு நடைபெறவில்லை: தேர்வு வாரியத் தலைவர் விளக்கம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in