சென்னை | தோஷ நிவர்த்தி செய்வதாக கூறி ரூ.56 லட்சம் மோசடி: இந்து மகா சபா நிர்வாகி கைது

சென்னை | தோஷ நிவர்த்தி செய்வதாக கூறி ரூ.56 லட்சம் மோசடி: இந்து மகா சபா நிர்வாகி கைது
Updated on: 
1 min read

சென்னை: சென்னை நங்​கநல்​லூரைச் சேர்ந்த காயத்ரி (38) என்​பவர், கடந்த 2023-ம் ஆண்டு கும்​பகோணம் சென்​றிருந்​தார். அங்​கு, பிரசன்​னம் பார்த்து குடும்​பப் பிரச்​சினை​களைத் தீர்த்து வைப்​ப​தாக விளம்​பரம் செய்​திருந்த ராமநிரஞ்​சன் (45) பற்​றித் தெரிந்து கொண்​டார்.

இவர், அகில பாரத இந்து மகா சபா​வின் ஆலய பாது​காப்​புப் பிரிவு மாநில பொதுச் செய​லா​ள​ராக உள்​ளார். இதையடுத்​து, சென்னை திரும்​பிய காயத்​ரி, தனது குடும்​பப் பிரச்​சினை​கள் குறித்து ராமநிரஞ்​சனிடம் செல்​போனில் பேசி​யுள்​ளார்.

அவரது வங்​கிக் கணக்​குக்கு ரூ.5 ஆயிரம் அனுப்​பி​யுள்​ளார். அதன்​பிறகு, காயத்​ரியை அடிக்​கடி தொடர்​பு​கொண்டு அவரது குடும்​பப் பிரச்​சினை​கள் குறித்து ராமநிரஞ்​சன் கேட்​டறிந்​தார்.

தொடர்ந்​து, வீட்​டில் தோஷங்கள் இருப்​ப​தாக​வும், அவற்றை நிவர்த்தி செய்​யா​விட்​டால் குடும்​பத்​தில் யாருக்​காவது உயி​ரிழப்பு ஏற்​படும் என்​றும் கூறி அச்​சுறுத்​தி​ய​தாக கூறப்​படு​கிறது.

இதை நம்​பிய காயத்​ரி, தனது வங்​கிக் கணக்கு மட்​டுமின்​றி, கணவர் மற்​றும் தாயாரின் வங்​கிக் கணக்​கு​கள் மூல​மாக பல்​வேறு தவணை​களில் ரூ.50.14 லட்​சம் வரை அனுப்​பி​யுள்​ளார்.

இதன்​பிறகும், காயத்​ரிக்கு தாலி தோஷம் இருப்​ப​தாகக் கூறிய ராமநிரஞ்​சன், அவரது தங்​கத் தாலியை விற்​பனை செய்ய வைத்து அதன் மூலம் கிடைத்த ரூ.6 லட்​சத்​தை​யும் பெற்​ற​தாகக் கூறப்​படு​கிறது.

இதனால் அதிர்ச்​சி​யடைந்த காயத்​ரி, சென்னை பழவந்​தாங்​கல் காவல் நிலை​யத்​தில் புகார் அளித்​தார். இதன்​பேரில் கடந்த அக்​டோபர் 2-ம் தேதி வழக்​குப் பதிவு செய்த போலீ​ஸார் அதுகுறித்து விசா​ரணை நடத்தி வந்​தனர்.

இந்​நிலை​யில் ராமநிரஞ்​சனை கும்​பகோணம் பகு​தி​யில் உள்ள அவரது வீட்​டில் திருநீலக்​குடி போலீ​ஸார் உதவி​யுடன் பழவந்​தாங்​கல் போலீ​ஸார் நேற்று முன்​தினம் இரவு கைது செய்​தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.

சென்னை | தோஷ நிவர்த்தி செய்வதாக கூறி ரூ.56 லட்சம் மோசடி: இந்து மகா சபா நிர்வாகி கைது
நடிகர் அர்ஜுன் மகள் குறித்து அவதூறு: பயில்வான் ரங்கநாதன் மீது வழக்குப் பதிவு

X