

சென்னை: ஆர்.கே.நகரில் வலி நிவாரண மாத்திரைகளை விற்பனை செய்த 4 பேரை போலீஸார் கைது செய்தனர்.
சென்னை ஆர்.கே. நகரில் போதைப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில் போலீஸார் நேற்று முன்தினம் ஐஓசி டீசல் யார்டு அருகே தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
அப்போது, அங்கு சந்தேகப்படும்படி கையில் பைகளுடன் நின்று கொண்டிருந்த 4 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். அவர்கள் வைத்திருந்த பையை சோதனை செய்தபோது, அதில் வலி நிவாரண மாத்திரைகளை சட்டவிரோத விற்பனைக்காக மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது.
பிடிபட்டவர்கள் ராயப்பேட்டை கணேசன் (61), காசிமேடு விக்னேஷ் (28), தண்டையார்பேட்டை முனியா (19), நேபாளத்தை சேர்ந்த சந்தோஷ் பரியார் (27) என்பது தெரியவந்தது.
ராயப்பேட்டை பகுதியில் மருந்து கடை நடத்தி வரும் கணேசன், மற்ற 3 பேரிடம் மாத்திரைகளை கொடுத்து சட்டவிரோத விற்பனையில் ஈடுபட்டுள்ளார். இதையடுத்து, 4 பேரையும் கைது செய்த போலீஸார், அவர்களிடம் இருந்து 534 வலி நிவாரண மாத்திரைகளை பறிமுதல் செய்தனர்.