மணிப்பூர் பெண்ணிடம் பாலியல் சீண்டல் செய்த உணவு டெலிவரி ஊழியர் கைது

மணிப்பூர் பெண்ணிடம் பாலியல் சீண்டல் செய்த உணவு டெலிவரி ஊழியர் கைது
Updated on
1 min read

சென்னை: மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்த 28 வயது இளம் பெண் ஒருவர் சென்னை சூளைமேட்டில் தங்கி, தனியார் ஷோரூமில் விற்பனையாளராக பணியாற்றி வருகிறார்.

இவர், நேற்று முன்தினம் காலை வீட்டின் கதவை பூட்டாமல் வீட்டுக்குள் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது, அடையாளம் தெரியாத நபர் ஒருவர் வீட்டுக்குள் நுழைந்து, அவரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டார். சட்டென கண் விழித்து எழுந்த அந்தப் பெண் அதிர்ச்சியில் கூச்சலிட்டார்.

இதையடுத்து, பாலியல் சீண்டலில் ஈடுபட்ட இளைஞர் தப்பி ஓடினார். இந்த விவகாரம் தொடர்பாக சூளைமேடு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்தனர்.

முதல் கட்டமாக கண்காணிப்பு கேமரா காட்சிகள் மற்றும் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு தப்பியது சைதாப்பேட்டை கார்னி கார்டன் 1-வது மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்த நேதாஜி (33) என்பது தெரிந்தது. தலைமறைவாக இருந்த அவரை போலீஸார் கைது செய்தனர்.

தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் கைதான நேதாஜி, தனியார் உணவு டெலிவரி நிறுவனத்தில் பணியாற்றி வந்ததும், உணவு டெலிவரி செய்யச் சென்றபோது முதல் மாடியில் திறந்திருந்த வீட்டுக்குள் நுழைந்து, தூங்கிக் கொண்டிருந்த மணிப்பூர் பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு தப்பியதும் தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீஸார் சிறையில் அடைத்தனர்.

மணிப்பூர் பெண்ணிடம் பாலியல் சீண்டல் செய்த உணவு டெலிவரி ஊழியர் கைது
விரைவாக தங்க நகை தயாரித்து தருவதாக ரூ.2.60 கோடி தங்க கட்டி பெற்று மோசடி: இருவர் கைது

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in