சென்னை: ரூ.78.5 லட்சம் மோசடி வழக்கில் தலைமறைவாக இருந்த நிதி நிறுவன உரிமையாளர் கைது

லதா

லதா

Updated on
1 min read

சென்னை: சென்னை நுங்​கம்​பாக்​கத்​தில் தனி​யார் நிதி நிறு​வனம் நடத்தி வந்​தவர் லதா (47). இவரும் இவரது நிறு​வனத்​தினரும் கடந்த 2008-ம் ஆண்டு திரு​வல்​லிக்​கேணி​யைச் சேர்ந்த சமி​யுல்​லா​கானிடம் முதலீடு செய்​தால் மாதம் 4 சதவீதம் லாபம் தரு​வ​தாகக் கூறி ரூ.35 லட்​சம் பெற்​றுள்​ளனர்.

ஆனால், பணத்தை திருப்​பித் தராமல் மோசடி நடை​பெற்​றுள்​ளது. இதுகுறித்​து, பாதிக்​கப்​பட்ட சமி​யுல்​லா​கான் சென்னை காவல் ஆணை​யர் அலு​வல​கத்​தில் உள்ள மத்​திய குற்​றப்​பிரி​வில் புகார் அளித்​தார்.

அதன்​படி, போலீ​ஸார் 2009-ல் வழக்​குப் பதிந்​தனர். பின்​னர், குற்​றப்​பத்​திரிகை தாக்​கல் செய்​யப்​பட்​டது. இதே பாணி​யில், அண்​ணா ​சாலை​யைச் சேர்ந்த இக்​பால் ராஜா​விடம் லதா தரப்​பினர் ரூ.43.5 லட்​சம் பெற்று மோசடி செய்​த​தாக வழக்​குப் பதி​யப்​பட்​டது.

இந்த 2 வழக்​கு​களி​லும் நீதி​மன்​றத்​தில் ஆஜரா​காமல் லதா தலைமறை​வா​னார். அவரை கைது செய்ய 2016-ம் ஆண்டு நீதி​மன்​றம் பிடி​யாணை பிறப்​பித்​தது. இந்​நிலை​யில், சிட்​ல​பாக்​கத்​தில் பதுங்​கி​யிருந்த லதாவை (47) போலீ​ஸார் நேற்று முன்​தினம் கைது செய்​தனர்.

<div class="paragraphs"><p>லதா</p></div>
தமிழகத்தில் விக்கிரவாண்டி உள்பட 15 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு அமல்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in