சின்னசேலம் அருகே மாணவிக்கு பேய் பிடித்ததாக கூறி சக மாணவிகள் தாக்குதல்

சின்னசேலம் அருகே மாணவிக்கு பேய் பிடித்ததாக கூறி சக மாணவிகள் தாக்குதல்
Updated on
1 min read

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம் வாணாபுரத்தைச் சேர்ந்த மாணவி ஒருவர், சின்னசேலம் தனியார் பொறியியல் கல்லூரியில் பி.டெக் சேர்ந்துள்ளார். இவரது விடுதி அறையில் கடலூர் மற்றும் விருத்தாசலத்தைச் சேர்ந்த இரு மாணவிகள், வாணாபுரத்தைச் சேர்ந்த மேலும் இரு மாணவிகளும் தங்கியிருந்தனர்.

இந்நிலையில் வாணாபு ரத்தைச் சேர்ந்த மாணவியின் நடத்தையில் சந்தேகமடைந்த சக மாணவிகள், குறிப்பிட்ட மாணவிக்கு பேய் பிடித்ததாகக் கூறி மாணவி கையில் கற்பூரத்தை ஏற்றி, துடைப்பத்தால் அடித்தனர். இதனால் அந்த மாணவிக்கு தீக்காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதையறிந்த கல்லூரி நிர்வாகம் உடனடியாக 4 மாணவிகளையும் கல்லூரியில் இருந்து நீக்கியதாக தெரிகிறது. பாதிப்புக்குள்ளான மாணவியின் பெற்றோர் தகவலறிந்து, தனது மகள் மீது தாக்குதல் நடத்திய சக மாணவிகள் 4 பேர் மீது சின்னசேலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சின்னசேலம் அருகே மாணவிக்கு பேய் பிடித்ததாக கூறி சக மாணவிகள் தாக்குதல்
அரசுப் பேருந்துகளில் பயணிகள் மட்டுமே முன்பதிவு டிக்கெட்களை ரத்து செய்ய முடியும்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in