சிறுவனின் கைகளை கயிறால் கட்டி தாக்கிய பெண் ஊழியர் கைது: ஆசிரியை தலைமறைவு

சிறுவனின் கைகளை கயிறால் கட்டி தாக்கிய பெண் ஊழியர் கைது: ஆசிரியை தலைமறைவு
Updated on: 
1 min read

திருவாரூர்: திருத்துறைப்பூண்டி கச்சேரி ரோடு பகுதியைச் சேர்ந்தவர் கோபிநாத் (33). இவரது 3 வயது மகன் ஷர்வின், அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ப்ரீகேஜி படித்து வருகிறார். இந்நிலையில், பள்ளி முடித்து வீடு திரும்பிய சிறுவனின் உடலில் காயங்கள் இருந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து, பெற்றோர் விசாரித்தபோது, பள்ளியில் ஆசிரியர் மற்றும் உதவியாளர் ஆகியோர் சிறுவனை தாக்கியது தெரியவந்தது.

இதையடுத்து பள்ளிக்குச் சென்று விசாரித்த சிறுவனின் தந்தை கோபிநாத், வகுப்பறையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை பார்த்துள்ளார். அப்போது, சிறுவனின் கைகளை கயிறால் கட்டி தாக்கப்படும் காட்சிகளை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து அவர் அளித்த புகாரின்பேரில், திருத்துறைப்பூண்டி போலீஸார் வழக்குப் பதிவு செய்து உதவியாளர் செல்வியை (42) நேற்று கைது செய்தனர். தலைமறைவாக உள்ள ஆசிரியை பாக்கியலட்சுமியை தேடிவருகின்றனர்.

சிறுவனின் கைகளை கயிறால் கட்டி தாக்கிய பெண் ஊழியர் கைது: ஆசிரியை தலைமறைவு
அரியலூர் அருகே மாயமான 3 வயது சிறுமி குளத்தில் சடலமாக மீட்பு: உறவினர்கள் போராட்டம்

X