

சென்னை: சென்னை கொடுங்கையூர், ஆர்.வி.நகரைச் சேர்ந்தவர் சுந்தரி. இவரது சகோதரி ஸ்ரீதேவி கடந்த 2025-ம் ஆண்டு உயிரிழந்தார். இதையடுத்து, ஸ்ரீதேவியின் மகள் பெமினா, தனது சித்தி சுந்தரியின் வீட்டில் வசித்து வந்தார்.
இந்நிலை யில், சுந்தரி வீட்டின் பீரோவில் இருந்த சுமார் 19 பவுன் நகைகள் திருடப்பட்டன. இது குறித்து கொடுங்கையூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தினர்.
விசாரணையில், சுந்தரி வீட்டில் தங்கியிருக்கும் பெமினாதான் நகைகளை திருடியிருப்பதும், திருட்டு நகைகளை அவரது தோழியான பெரம்பூரைச் சேர்ந்த வழக்கறிஞர் ஸ்ருதிகா (23) மூலம் அடகுக்கடை ஒன்றில் அடகு வைத்து பணம் பெற்றிருப்பதும் தெரியவந்தது.
இதையடுத்து போலீஸார் ஸ்ருதிகாவை கைது செய்தனர். தலைமறைவாக இருக்கும் பெமினாவை தேடுகின்றனர்.