

சென்னை: தமிழகத்தில் அதிக மின்கட்டணம் வசூலிக்கப்படுவது குறித்து விசாரணை நடத்த குழு அமைக்கக்கோரி தொடரப்பட்ட வழக்கை தலைமை நீதிபதி அமர்வுக்கு பரிந்துரை செய்து தனி நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக சென்னை திருவேற்காட்டைச் சேர்ந்த காமேஷ் என்பவர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், ‘‘தமிழகத்தில் தவெக தலைமையில் புதிய அரசு பொறுப்பேற்ற பிறகு 100 யூனிட் இலவச மின்சாரம், 200 யூனிட்டாக உயர்த்தப்பட்டது.
ஆனால் கடந்த ஒன்றரை மாதங்களாக வீட்டு உபயோகம் மற்றும் வணிக ரீதியிலான மின் கட்டணம் பல மடங்கு அதிகரித்துள்ளது. இதுதொடர்பாக ஒன்றரை லட்சம் மின்நுகர்வோர் மின்வாரியத்தில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதனால் பொதுமக்கள் கடுமையான பாதிப்பை சந்தித்து வருவதால் அதி்க மின்கட்டண வசூல் குறித்தும், மின்கட்டண விதிப்பு குளறுபடிகளை சரிசெய்யும் விதமாகவும் குழு ஒன்றை அமைத்து விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும்.
அத்துடன் பழைய மின் கட்டண விதிப்பு நடைமுறைகளை பின்பற்ற மின்வாரியத்துக்கு உத்தரவிட வேண்டும், எனக் கோரியிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி பி.டி.ஆஷா, பொதுநலன் சார்ந்து இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளதால், இந்த வழக்கை தலைமை நீதிபதி அமர்வுக்கு பரிந்துரை செய்து உத்தரவிட்டுள்ளார்.