குடும்ப தகராறில் 6 வயது மகனை கிணற்றில் வீசி கொன்ற தந்தை கைது

குடும்ப தகராறில் 6 வயது மகனை கிணற்றில் வீசி கொன்ற தந்தை கைது
Updated on: 
1 min read

கள்ளக்குறிச்சி: விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே நல்லான்பிள்ளைபெற்றாள் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் செல்வராஜ் - தேவி தம்பதி. இவர்களது 6 வயது மகன் சஞ்சய், அதே பகுதி்யில் உள்ள அரசுப் பள்ளியில் முதலாம் வகுப்பு படித்து வந்தான்.

குடிப்பழக்கம் உள்ள செல்வராஜ், மனைவியிடம் அடிக்கடி தகராறு செய்துள்ளார். தம்பதிக்குள் நேற்று முன்தினமும் தகராறு ஏற்பட்டுள்ளது. பின்னர் செல்வராஜ், தனது மகனை வெளியே அழைத்துச் சென்றுள்ளார். இரவு நேரத்தில் அரசு மருத்துவமனை அருகில் உள்ள விவசாய கிணற்றில் மகனை வீசி கொடூரமாக கொலை செய்துள்ளார்.

இதுகுறித்து தகவலறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் பல மணி நேரம் போராடி சிறுவனை சடலமாக மீட்டனர். இதுதொடர்பாக செஞ்சி காவல் நிலையத்தில் தேவி நேற்று புகார் அளித்துள்ளார்.

அதில், கடந்த 2 நாட்களாக செல்வராஜ் குடிபோதையில் கடப்பாரையுடன் வீட்டில் தகராறு செய்து வந்தார். நேற்று மது அருந்த என்னிடம் பணம் கேட்டு மிரட்டினார். பணம் தரவில்லை என்றால் குழந்தையை கொன்றுவிடுவேன் என மிரட்டினார். பின்னர் மகனை மீன் பிடிக்க அழைத்துச் செல்வதாகக் கூறி அழைத்துச் சென்று, கிணற்றில் வீசி கொலை செய்தார் என்று தெரிவித்துள்ளார். போலீஸார் வழக்குப்பதிவு செய்து செல்வராஜை கைது செய்தனர்.

குடும்ப தகராறில் 6 வயது மகனை கிணற்றில் வீசி கொன்ற தந்தை கைது
அரசு பணிக்கான வயது வரம்பு 5 ஆண்டுகள் அதிகரிப்பு: முதல்வர் விஜய் உத்தரவு

X