

செங்கல்பட்டு மாவட்டம், ஊரப்பாக்கம் ரோகிணி நகர் பகுதியை சேர்ந்தவர் வெள்ளைச்சாமி இவரது மகன் சிவநேசன் (32). இவர் தினமும் மது அருந்திவிட்டு தனது தந்தையுடன் சண்டை போட்டு வந்துள்ளார்.
இந்நிலையில், சம்பவத்தன்று மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்த சிவநேசன் தனது தந்தையுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த தந்தை வீட்டிலிருந்த கிரைண்டர் கல்லை எடுத்து மகன் தலையில் போட்டு கொலை செய்துவிட்டு, மகனே குடிபோதையில் தவறி கிரைண்டர் கல் மீது விழுந்ததால் தலையில் அடிபட்டு மயங்கி உயிரிழந்து விட்டதாக தனது மனைவி மற்றும் அக்கம் பக்கத்தினரிடம் கூறியுள்ளார்.
இதுகுறித்து தகவல் அறிந்த கூடு வாஞ்சேரி போலீஸார், சிவநேசன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத் தனர். பின்னர். இது குறித்து, கூடு வாஞ்சேரி போலீஸார் இளைஞர் சாவில் சந்தேகம் இருப்பதாக முதலில் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வந்தனர்.
இதற்கிடையே, பிரேத பரிசோதனை செய்த மருத்து வர்கள் இளைஞர் தலையில் பலமாக கல்லால் தாக்கி இருப்பதால், இது கொலையாக தான் இருக்கும் என்று போலீஸாரிடம் அறிக்கை சமர்ப்பித்தனர்.
கிடுக்கிப்பிடி விசாரணை: இதனைத் தொடர்ந்து, கூடுவாஞ் சேரி போலீஸார் தந்தை வெள்ளைச் சாமியிடம் கிடுக்கிப்பிடி விசாரணை செய்ததில், மகனை, தந்தையே கொலை செய்த விவரம் தெரிய வந்தது.
இதுகுறித்து, சிவநேசன் தந்தை வெள்ளைச்சாமி போலீஸாரிடம் அளித்துள்ள வாக்கு மூலத்தில், மகன் சிவநேசன் வேலைக்கு செல்லாமல் வீட்டில் நான் சேமித்து வைத்து இருந்த பணத்தை எடுத்து தினமும் குடித்துவிட்டு வந்து தந்தை, தாய் என்றும் பாராமல் தினமும் தகராறில் ஈடுபட்டு வந்தார். இதனால், ஆத்திரத்தில் கிரைண்டர் கல்லை போட்டு மகனை கொலை செய்து விட்டேன் என கூறியதாக போலீஸார் தெரிவித்தனர். இதையடுத்து, வெள்ளைச் சாமியை கைது செய்த போலீஸார். செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.