

தென்காசி: தென்காசி மாவட்டம், ஆலங்குளத்தை சேர்ந்தவர் ஆகாஷ்.இவர், மேலஅரியநாயகிபுரத்தைச் சேர்ந்த சுஷ்மிதா என்பவரை காதலித்து பெண்ணின்பெற்றோர் எதிர்ப்பை மீறி, திருமணம் செய்தார்.
இருவரும் சிவகாமிபுரத்தில் வாடகை வீட்டில் வசிக்கின்றனர். இந்நிலையில் சுஷ்மிதாவின் தந்தை முருகன் வீட்டுக்கு வந்து தம்பதியரை வெட்டிவிட்டு தப்பினார்.
இதில் பலத்த காயமடைந்த இருவரும் திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். புகாரின்பேரில் பாவூர்சத்திரம் போலீஸார் வழக்கு பதிவு செய்து, முருகனை கைது செய்தனர்.