கிண்டி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற தந்தை - மகன் அடையாளம் தெரியாத வாகனம் மோதி உயிரிழப்பு

ரவி, கார்த்திக்

ரவி, கார்த்திக்

Updated on
1 min read

சென்னை: அடை​யாளம் தெரி​யாத வாக​னம் மோதி இருசக்கர வாக​னத்​தில் சென்ற தந்தை - மகன் உயி​ரிழந்​தனர். சென்னை கிண்டி, அருளாகி அம்​மன் கோயில் தெரு​வைச் சேர்ந்​தவர் ரவி (50).

கிண்டி அரசு பல்​நோக்கு மருத்​து​வ​மனை அருகே டிபன் கடை நடத்தி வந்​தார். இவருக்கு திரு​மண​மாகி 3 மகன்​கள் உள்​ளனர். இவர் நேற்று முன்​தினம் இரவு சைதாப்​பேட்டை சந்​தை​யில் காய்​கறி மற்​றும் மளி​கைப் பொருட்​கள் வாங்​கு​வதற்​காக இருசக்கர வாக​னத்​தில் சென்​றார். பின்​னால் இளைய மகன் கார்த்​திக் (15) அமர்ந்​திருந்​தார்.

அப்​போது மழை விட்​டு​விட்டு பெய்து கொண்​டிருந்​தது. கிண்டி ஆலந்​தூர் ரோடு கல்​லாற்று மேம்​பாலத்​தில் இருசக்கர வாக​னத்​தில் சென்​ற​போது அந்த வழி​யாக வந்த அடை​யாளம் தெரி​யாத வாக​னம் அவர்​கள் சென்ற வாக​னத்​தின் மீது மோதி விட்டு நிற்​காமல் சென்​றது.

இதில், தந்தை - மகன் இரு​வரும் வாக​னத்​தின் சக்​கரத்​தில் சிக்கி அங்​கேயே உயி​ரிழந்​தனர். இதைக் கண்டு அந்த வழி​யாகச் சென்ற வாகன ஓட்​டிகள் போலீ​ஸாருக்கு உடனடி​யாக தகவல் தெரி​வித்​தனர்.

தகவல் அறிந்து அடை​யாறு போக்​கு​வரத்து புல​னாய்​வுப் பிரிவு போலீ​ஸார் சம்பவ இடம் விரைந்து இரு​வரின் சடலங்​களை​யும் மீட்டு பிரேதப் பரிசோதனைக்​காக ராயப்​பேட்டை அரசு மருத்​து​வ​மனைக்கு அனுப்பி வைத்​தனர்.

மேலும் இது தொடர்​பாக வழக்​குப் பதிந்து விபத்தை ஏற்​படுத்​தி​விட்டு நிற்​காமல் சென்ற வாக​னம் குறித்து சிசிடிவி கேமரா காட்​சிகளை அடிப்​படை​யாக வைத்​து தேடி வரு​கின்​றனர்​.

<div class="paragraphs"><p>ரவி, கார்த்திக்</p></div>
அனல் மின் நிலைய ஊழியர்களுக்கு 2, 4-வது சனிக்கிழமைகளில் விடுமுறை: மின் வாரியம் உத்தரவு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in