திருவள்ளூர் | ஆடை வடிவமைப்பாளரிடம் ரூ.16 லட்சம், 22 பவுன் நகை மோசடி

தந்தை, மகனுக்கு போலீஸ் வலைவீச்சு
திருவள்ளூர் | ஆடை வடிவமைப்பாளரிடம்  ரூ.16 லட்சம், 22 பவுன் நகை மோசடி
Updated on: 
1 min read

திருவள்ளூர்: ஆடை வடிவ​மைப்​பாளரிடம் ரூ.16 லட்​சம், 22 பவுன் தங்க நகைகளை அவசர தேவைக்​காக பெற்​று​விட்டு திருப்​பித் தராமல் மோசடி செய்த கேரளாவைச் சேர்ந்த தந்​தை, மகனை போலீ​ஸார் தீவிர​மாக தேடி வரு​கின்​றனர்.

திருவள்ளூர் அருகே உள்ள மேல்​நல்​லத்​தூர் பகு​தி​யில் வசித்து வருபவர் ரஷிதா (54). கேரளாவை பூர்​வீக​மாக கொண்ட இவர் ஆடை வடிவ​மைப்​பாள​ராக இருந்து வரு​கிறார்.

கேரளா​வில் ரஷி​தா​வின் தந்​தைக்கு உதவி​யாக இருந்து வந்த, மலப்​புரம் மாவட்​டத்​தைச் சேர்ந்த சுஹேப்​(48) கடந்த 2020-ம் ஆண்டு ரஷி​தா​விடம் மேற்​பார்​வை​யாள​ராக பணிக்​குச் சேர்ந்​துள்​ளார். சுஹேப் மட்​டுமல்​லாமல், அவரது மகன் அகில் நசீம்​(28) என்​பவரும் ரஷி​தா​விடம் வாகன ஓட்​டுந​ராக பணிபுரிந்து வந்​துள்​ளார்.

சிறுகச் சிறுக கடன்

இந்​நிலை​யில், சுஹேப், வீட்​டில் உள்​ளவர்​களுக்கு உடல்​நலம் சரி​யில்​லை, மகனை வெளி​நாட்​டுக்கு அனுப்ப வேண்​டும் போன்ற பல்​வேறு காரணங்​களைச் சொல்​லி, ரஷி​தா​விடம் 3 ஆண்​டு​களில் ரூ.16 லட்​சம் வரை கடனாக வாங்​கி​யுள்​ளார்.

மேலும், ரஷி​தா​விடம் 22 பவுன் தங்க நகைகளை​யும் அவசர தேவைக்​காக சிறுகச் சிறுக வாங்​கி​யுள்​ளார். அவ்​வாறு வாங்​கிய பணம் மற்​றும் நகையை ரஷிதா பலமுறை திரும்​பக் கேட்​டும் திருப்​பித் தராமல் இருந்து வந்​துள்​ளார்.

பதிலளிக்காமல் தவிர்ப்பு

இந்​நிலை​யில் கடந்த 2024-ம் ஆண்​டு, கேரளா​வுக்​குச் சென்று பணம் மற்​றும் நகைகளை அனுப்​புவ​தாக கூறி​விட்​டு, சுஹேப்​பும், அவரது மகன் அகில் நசீ​மும் சென்​றுள்​ளனர். அவர்​கள் உறு​தி​யளித்​த​படி பணம், நகைகளை ரஷி​தாவுக்கு அனுப்​ப​வில்​லை.

ஆகவே சுஹேப், அகில் நசீம் ஆகியோர் குறித்து கேரளா​வில் விசா​ரித்​த​போது அவர்​கள், அங்கு தேநீர் கடை நடத்தி வரு​வது தெரிய​வந்​துள்​ளது. இதையடுத்து சுஹேப், அகில் நசீம் ஆகியோரை ரஷிதா செல்​போனில் பலமுறை தொடர்பு கொண்​ட​போதும், அவர்​கள் பதில் அளிக்​காமல் தவிர்த்து வந்​துள்​ளனர்.

இதனால் அதிர்ச்​சி​யடைந்த ரஷிதா திரு​வள்​ளூர் தாலுகா காவல் நிலை​யத்​தி​லும், முதல்​வர் தனிப்​பிரி​விலும் புகார் அளித்​துள்​ளார். அப்​பு​காரின் பேரில் திரு​வள்​ளூர் தாலுகா போலீ​ஸார் நேற்று முன்​தினம் வழக்​குப் பதிவு செய்து சுஹேப் மற்​றும் அவரது மகன் அகில் நசீம் ஆகிய இரு​வரை தீவிர​மாகத்​ தேடி வரு​கின்​றனர்​.

திருவள்ளூர் | ஆடை வடிவமைப்பாளரிடம்  ரூ.16 லட்சம், 22 பவுன் நகை மோசடி
செப்டிக் டேங்க் கட்டுமான பணியில் ஈடுபட்ட 3 தொழிலாளர்கள் மூச்சுத்திணறி உயிரிழப்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in