

கரூர்: கடவூர் அருகே அடையாளம் தெரியாத நபர் நாட்டுத் துப்பாக்கியால் சுட்டதில், குண்டு பாய்ந்து விவசாயி காயமடைந்தார்.
கரூர் மாவட்டம் கடவூர் வட்டம் சேவாப்பூரை அடுத்த வளையபட்டியைச் சேர்ந்தவர் கருணைகிரி. விவசாயி. நேற்று முன்தினம் இரவு தனது தோட்டத்து வீட்டுக்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது, அடையாளம் தெரியாத ஒருவர் நாட்டுத் துப்பாக்கியால் சுட்டதில் இடுப்பு, முதுகு ஆகியஇடங்களில் 10 பால்ரஸ் குண்டுகள் பாய்ந்தன. இதில் காயமடைந்த அவர், திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்து பாலவிடுதி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.