தாம்பரம்: குடும்ப பிரச்சினையில் கூலிப் படையை ஏவி கணவரின் காலை உடைத்த மனைவி உள்பட 3 பேர் கைது

தாம்பரம்: குடும்ப பிரச்சினையில் கூலிப் படையை ஏவி கணவரின் காலை உடைத்த மனைவி உள்பட 3 பேர் கைது
Updated on
1 min read

தாம்பரம்: குடும்​பத் தகராறு காரண​மாக கூலிப்​படையை ஏவி கணவரின் காலை உடைக்​கச் செய்த மனைவி உள்​ளிட்ட 3 பேரை பீர்க்​கன்​காரணை போலீ​ஸார் கைது செய்​துள்​ளனர்.

தாம்​பரம் அருகே வேங்​கம்​பாக்​கம் பகு​தி​யைச் சேர்ந்த தாமோதரன் (40) என்​பவருக்​கும் வசந்தா என்​பவருக்​கும் 12 ஆண்டு​களுக்கு முன்பு திரு​மணம் நடை​பெற்​றது. இவர்​களுக்கு 11 வயதில் மகன் உள்​ளார். சில ஆண்​டு​களுக்கு முன்பு ஏற்​பட்ட குடும்​பப் பிரச்​சினை​யால் வசந்தா வீட்டை விட்டு வெளி​யேறி தனியாக வசித்து வந்​த​தாக கூறப்​படு​கிறது.

இந்​நிலை​யில், மகனை தன்​னுடன் அனுப்பி வைக்​கு​மாறு வசந்தா கேட்​ட​தாக​வும், அதற்கு தாமோதரன் மறுப்பு தெரி​வித்​த​தாக​வும் தெரி​கிறது. இதனால் ஆத்​திரமடைந்த வசந்​தா, கணவரைப் பழிவாங்க திட்​ட​மிட்​ட​தாக கூறப்​படு​கிறது. கடந்த ஏப்​ரல் மாதம் தாமோதரனுக்கு பார்​சல் வந்​துள்​ள​தாக கூறி அவரது முகவரியை பெற்ற மர்ம நபர்​கள், வீட்​டுக்கு வந்து பார்​சல் கொடுப்​பது போல் நடித்து இரும்பு பைப்​பால் தாக்கி வலது காலை உடைத்​தனர்.

தடுக்க வந்த அவரது வயதான தாயாரை​யும் கீழே தள்ளி தாக்கிவிட்டு தப்​பிச் சென்​றனர். இது குறித்து பீர்க்​கன்​காரணை போலீ​ஸார் வழக்​குப் பதிவு செய்து விசா​ரணை நடத்​தினர். பைக் எண்​களை வைத்து மேற்​கொண்ட விசா​ரணை​யில், தாக்​குதலில் ஈடு​பட்​ட​வர்​கள் பரத், அகஸ்​டின் என்​பதும், அவர்​கள் பிரபல ரவுடி பொன்​மணி மூலம் கூலிப்​படை​யாக செயல்​பட்​டதும் தெரிந்​தது. மேலும், வசந்தா தனது கணவரின் உயிருக்கு ஆபத்து ஏற்​ப​டா​மல் கால்​களை மட்​டும் உடைக்க ரூ.4 லட்​சம் பேரம் பேசி, முன் பணமாக ரூ.3.50 லட்​சம் வழங்​கிய​தாக விசா​ரணை​யில் தெரிந்தது.

இதையடுத்து வசந்தா, ரவுடி பொன்​மணி, பரத் ஆகியோரை போலீ​ஸார் கைது செய்து நீதி​மன்​றத்​தில் ஆஜர்​படுத்தி சிறை​யில் அடைத்​தனர். இதற்​கிடையே, தாக்​குதலுக்​குப் பிறகு தப்​பிச் செல்லும் ​போது சாலை விபத்​தில் சிக்கி காலில் எலும்பு முறிவு ஏற்பட்ட அகஸ்​டின் மருத்​து​வ​மனை​யில் சிகிச்சை பெற்று வருகிறார். சிகிச்சை முடிந்​ததும் அவரை​யும் கைது செய்து சிறையில் அடைக்க உள்ளதாக போலீ​ஸார்​ கூறினர்.

தாம்பரம்: குடும்ப பிரச்சினையில் கூலிப் படையை ஏவி கணவரின் காலை உடைத்த மனைவி உள்பட 3 பேர் கைது
வண்டலூர்: அரசு பேருந்து, பைக் மோதி பள்ளி, கல்லூரி மாணவிகள் உயிரிழப்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in