இன்ஸ்டாகிராமில் கல்லூரி மாணவியை பழக வைத்து இளைஞரிடம் பணம் பறிப்பு: ஓசூர் அருகே 5 பேர் கும்பல் கைது

இன்ஸ்டாகிராமில் கல்லூரி மாணவியை பழக வைத்து இளைஞரிடம் பணம் பறிப்பு: ஓசூர் அருகே 5 பேர் கும்பல் கைது
Updated on: 
1 min read

ஓசூர்: ஓசூர் அருகே கல்​லூரி மாணவி மூலம் இன்ஸ்டாகிராமில் பழக வைத்து, ரியல் எஸ்​டேட் தொழில் செய்து வரும் இளைஞரிடம் ரூ.3 லட்​சம் பணம் பறித்த 5 பேரை போலீ​ஸார் கைது செய்​தனர்.

கிருஷ்ணகிரி மாவட்​டம் கெலமங்​கலம் அருகே தம்​மண்​டரப்​பள்​ளியைச் சேர்ந்த நவீன்​குமார் (29), ரியல் எஸ்​டேட் தொழில் செய்து வரு​கிறார். இவரிடம் 20 வயது கல்​லூரி மாணவி ஒரு​வர் இன்ஸ்டாகிராம் மூலம் செல்​போன் எண்​ணைப் பெற்று பேசி பழகி வந்​துள்​ளார். கடந்த 23-ம் தேதி ஓசூரை அடுத்த கெல​வரப்​பள்ளி அணை​யில் நவீன்​குமாரும், அந்த மாணவியும் பேசிக்​கொண்​டிருந்​தனர்.

அங்கு காரில் வந்த 5 பேர் கொண்ட கும்​பலில் ஒரு​வர், தனது தங்​கை​யிடம் எப்​படி பேசலாம் எனக் கேட்டு நவீன்​குமாரை மிரட்​டியுள்​ளார். பின்​னர் அவரை காரில் பைரமங்​கலத்​துக்கு கடத்​திச் சென்று பணம் கேட்டு மிரட்​டியுள்​ளனர். அவரிடம் பணம் இல்​லாததால், அவர் அணிந்​திருந்த நகையை அட​மானம் வைத்து ரூ.3 லட்​சம் பெற்​றுக்​கொண்டு அந்த கும்​பல் சென்​றது.

இது​குறித்து நவீன்​குமார் நல்​லூர் காவல் நிலை​யத்​தில் புகார் அளித்​தார். அதன்​பேரில் போலீ​ஸார் வழக்​குப் பதிவு செய்து விசா​ரணை நடத்​தினர். இதில், கெலமங்​கலத்​தைச் சேர்ந்த ஹரி​கரன் (22) என்​பவர், தான் பழகி வந்த கல்​லூரி மாணவி மூலம் நவீன்​குமாரிடம் இன்ஸ்டாகிராமில் பழகச் செய்து, பின்​னர் அவரை கெல​வரப்​பள்ளி அணைக்கு வரவழைத்து பணம் பறித்​தது தெரிய​வந்​தது. இதையடுத்து, ஹரி​கரன் (22), கெலமங்​கலத்​தைச் சேர்ந்த அப்​ராஸ் (24), பாலாஜி (23), நவீன்​குமார் (24), தம்​ம​நாயக்​க​னஅள்​ளியைச் சேர்ந்த மகேந்​திரன் (26) ஆகிய 5 பேரை​யும் நல்​லூர் போலீ​ஸார் கைது செய்​தனர்.

இன்ஸ்டாகிராமில் கல்லூரி மாணவியை பழக வைத்து இளைஞரிடம் பணம் பறிப்பு: ஓசூர் அருகே 5 பேர் கும்பல் கைது
ஓடிடி வெளியீட்டில் வரவேற்பை பெறும் விஜய் சேதுபதியின் ‘பத்தா’

X