சென்னை | மாணவியின் தங்க நகையை திருடிய பொறியாளர் கைது

சென்னை | மாணவியின் தங்க நகையை திருடிய பொறியாளர் கைது
Updated on
1 min read

சென்னை: ​நாகப்​பட்​டினத்தை சேர்ந்த கல்​லூரி மாணவிக்கு (வயது 19) முகநூல் மூலம் சென்னை மேற்கு தாம்​பரம் கிருஷ்ணா நகரை சேர்ந்த இளவரசன் (29) என்​பவரது நட்பு கிடைத்​துள்​ளது. பொறி​யியல் பட்​ட​தா​ரி​யான இவர், சென்​னை​யில் உள்ள ஐ.டி. நிறு​வனத்​தில் வேலை செய்​கிறார்.

சமீபத்​தில் சென்னை திரு​வொற்​றியூரில் உள்ள சித்தி வீட்​டுக்கு வந்த மாண​வி, கடந்த 7-ம் தேதி விரு​கம்​பாக்​கம் சென்​று, முகநூல் நண்​பர் இளவரசனை சந்​தித்​துள்​ளார்.

பின்​னர், மாண​வியை கோயம்​பேடு பேருந்து நிலை​யத்​துக்கு அழைத்​துச் சென்​று, நாகப்​பட்​டினத்​துக்கு பேருந்​தில் ஏற்றி அனுப்பி வைத்​துள்​ளார் இளவரசன். நாகப்​பட்​டினம் திரும்​பிய மாண​வி, தனது பேக்​கில் வைத்​திருந்த ஒன்​றரை பவுன் தங்க நகையை காணா​மல் திடுக்​கிட்​டார்.

இளவரசனை தொடர்பு கொண்​ட​போது அவர் போனை எடுக்​க​வில்​லை. இதையடுத்​து, கோயம்​பேடு பேருந்து நிலைய காவல் நிலை​யத்​தில் மாணவி புகார் கொடுத்​தார். போலீ​ஸார் விசாரணை நடத்​தினர்.

இதில், மாணவிக்கு தெரி​யாமல்நகையை இளவரசன் திருடியது தெரிய​வந்​தது. இதையடுத்​து, அவரை போலீ​ஸார் கைது செய்​தனர்​.

சென்னை | மாணவியின் தங்க நகையை திருடிய பொறியாளர் கைது
ஆந்திராவில் பலர் பாதிக்கப்பட்டதை தொடர்ந்து உண்ணி காய்ச்சலை தடுக்க நடவடிக்கை அவசியம்: சுகாதாரத் துறை அறிவுறுத்தல்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in