

தமிழ்வாணன்
சென்னை: மடிப்பாக்கத்தைச் சேர்ந்தவர் ஜெய (61). கடந்த 29-ம் தேதி மாலை, கர்ப்பிணி மருமகளுடன் வீட்டினருகே திலகர் அவென்யூ 1-வது மெயின் ரோடு வழியாக நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது, பின் தொடர்ந்து வந்த, வழிப்பறி கொள்ளையன் ஜெய கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் தங்க தாலிச் செயினை பறித்துக் கொண்டு தப்பியோடினார். இது தொடர்பாக அவர் மடிப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன்படி, போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்தனர். சிசிடிவி கேமரா காட்சிகள் அடிப்படையில் நடத்தப்பட்ட விசாரணையில், ஜெயஸ்ரீயிடம் நகை பறிப்பில் ஈடுபட்டது மடிப்பாக்கம், பஜார் மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்த தமிழ்வாணன் (23) என தெரிய வந்தது.
தலைமறைவாக இருந்த அவரை போலீஸார் நேற்று முன்தினம் கைது செய்தனர்.
விசாரணையில், கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த தமிழ்வாணன் பொறியியல் படித்து, சென்னையில் தங்கி தனியார் கட்டுமான நிறுவனத்தில் இன்ஜினீயராக வேலை செய்து வருவதும், ஆன்லைனில் வாங்கிய கடனை திரும்ப செலுத்த பணம் தேவைப்பட்டதால், நகைபறிப்பில் ஈடுபட்டதும் தெரிய வந்தது. இதையடுத்து, அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.