சென்னை விமான நிலையத்தில் சிக்கிய ரூ.5 கோடி உயர்ரக கஞ்சா

சென்னை விமான நிலையத்தில் சிக்கிய ரூ.5 கோடி உயர்ரக கஞ்சா
Updated on: 
1 min read

சென்னை: தாய்​லாந்து தலைநகர் பாங்​காக்​கில் இருந்து பயணி​கள் விமானம் சென்​னைக்கு நேற்று முன்​தினம் இரவு வந்​தது. அந்த விமானத்​தில் வந்த பயணி​களை​யும், அவர்​களின் உடைமை​களை​யும் சுங்​கத்​துறை அதி​காரி​கள் சோதனை செய்து அனுப்பி கொண்​டிருந்​தனர்.

அப்​போது வந்த சென்​னையைச் சேர்ந்த 28 வயதுடைய இளைஞர் மீது அதி​காரி​களுக்கு சந்​தேகம் ஏற்​பட்​டது. சுற்​றுலா விசா​வில் தாய்​லாந்து சென்​று​விட்டு வந்த அவர் கொண்டு வந்​திருந்த சூட்​கேசை திறந்து அதி​காரி​கள் சோதனை செய்​தனர்.

அதில் இருந்த தாய்​லாந்து நாட்டு உணவுப் பொருட்​கள் பாக்​கெட்​டு​களை பிரித்து சோதனை செய்த போது, அதில் ரூ.5.26 கோடி மதிப்​புள்ள 15 கிலோ ஹைட்​ரோ​போனிக் கஞ்சா மறைத்து வைக்​கப்​பட்​டிருந்​தது தெரிய வந்தது. இதையடுத்​து, கஞ்​சாவைப் பறி​முதல் செய்த அதி​காரி​கள், அந்த இளைஞரை கைது செய்து நீதி​மன்​றத்​தில் ஆஜர்​படுத்​தி சிறை​யில்​ அடைத்​தனர்​.

சென்னை விமான நிலையத்தில் சிக்கிய ரூ.5 கோடி உயர்ரக கஞ்சா
விஜய் வரும் வழியில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட நாதக வேட்பாளர், கட்சியினர் கைது

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in