புதுக்கோட்டையில் இலங்கைக்கு கடத்தப்பட இருந்த ரூ.9 கோடி போதை மாத்திரைகள் பறிமுதல்

4 பேரை கைது செய்த போலீஸார்
புதுக்கோட்டையில் இலங்கைக்கு கடத்தப்பட இருந்த ரூ.9 கோடி போதை மாத்திரைகள் பறிமுதல்
Updated on
1 min read

புதுக்​கோட்டை: புதுக்​கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தா செய்​தி​யாளர்​களிடம் நேற்று இரவு கூறிய​தாவது: புதுக்​கோட்டை நகர டிஎஸ்பி இரா.பிருந்தா தலை​மையி​லான போலீ​ஸார், டிவிஎஸ் கார்​னர் பகு​தி​யில் ரோந்​துப் பணி​யில் ஈடு​பட்​டிருந்​த​போது, சந்​தேகத்​துக்கு இடமான வகை​யில் 4 பேர் அட்​டைப் பெட்​டிகளு​டன் சாலை​யோரத்​தில் நின்​றிருந்​தது தெரிய​வந்​தது.

அவர்​களிடம் நடத்​திய விசா​ரணை​யில், அவர்​கள் போதை மாத்​திரைகளை இலங்​கைக்கு கடத்த இருந்​ததும், வாக​னம் ஒன்​றுக்​காக காத்​திருந்​ததும் தெரிய​வந்​தது.

4.82 லட்​சம் மாத்திரைகள்: இதையடுத்​து, ராம​நாத​புரம் மாவட்​டம் பாம்​பன் பகு​தி​யைச் சேர்ந்த ஆம்​ஸ்ட்​ராங்​(33), அமல்​ராஜ்(37), பிர​தாப்​(35), சந்​தி​யா(36) ஆகியோரைப் போலீ​ஸார் கைது செய்​தனர். மேலும், அவர்​கள் 7 பெட்​டிகளில் வைத்​திருந்த, ரூ.9 கோடி மதிப்​பிலான 4.82 லட்​சம் போதை மாத்​திரைகள் பறி​முதல் செய்​யப்​பட்​டன.

இந்த மாத்​திரைகளில் உற்​பத்தி செய்​யப்​பட்ட இடம் குறித்த விவரங்​கள் இல்​லை. தொடர்ந்து வி​சா​ரணை நடத்​தப்​பட்டு வரு​கிறது. இவ்​வாறு அவர்​ தெரி​வித்​தார்​.

புதுக்கோட்டையில் இலங்கைக்கு கடத்தப்பட இருந்த ரூ.9 கோடி போதை மாத்திரைகள் பறிமுதல்
காந்தியை மக்கள் மனதிலிருந்து அகற்ற திட்டம்: பாஜக அரசு மீது முதல்வர் ஸ்டாலின் குற்றச்சாட்டு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in