சின்னமனூர் அரசு மருத்துவமனையில் தொழிலாளியை வெட்டிய ஓட்டுநர் கைது

சின்னமனூர் அரசு மருத்துவமனையில் தொழிலாளியை வெட்டிய ஓட்டுநர் கைது
Updated on
1 min read

சின்னமனூர்: தேனி மாவட்டம் சின்னமனூர் சாமிகுளத்தைச் சேர்ந்தவர் சசிகுமார் (38). கம்பி கட்டும் தொழிலாளி. உடல் நலக் கோளாறால் நேற்று இவர் சின்னமனூர் அரசு மருத்துவமனைக்குச் சென்றார்.

அப்போது கோட்டுரைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் செல்வம் (44) இவரை அரிவாளால் வெட்ட முயன்றார். சசிகுமார் பயந்து ஓடவே அவரை விரட்டிச் சென்று கை உள்ளிட்ட பல இடங்களில் வெட்டிவிட்டு தப்பி விட்டார்.

பலத்த காயமடைந்து கீழே விழுந்த சசி குமாரை அங்கிருந்தவர்கள் மீட்டு முதலுதவி அளித்துபின்பு தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக சின்னமனூர் போலீஸார் செல்வத்தை கைது செய்தனர். போலீஸார் கூறும்போது, ‘செல்வம் மனைவி முனீஸ்வரியுடன் சசிகுமார் பழகி வந்தார். இதனால் சசிகுமாரை அரிவாளால் வெட்டியுள்ளார்’ என்றனர்.

சின்னமனூர் அரசு மருத்துவமனையில் தொழிலாளியை வெட்டிய ஓட்டுநர் கைது
கியூ.எஸ். உலகளாவிய தர வரிசை வெளியீடு: பொறியியல் - தொழில்நுட்பத்தில் விஐடி பல்கலைக்கழகத்துக்கு 119-ம் இடம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in