

வால்பாறை: கோவை மாவட்டம் வால்பாறை பன்னிமேடு எஸ்டேட்டைச் சேர்ந்தவர் சுரேஷ். இவரது தம்பி மதன்குமார். இருவரும் வால்பாறை நகரில் ஹோட்டல் நடத்தி வருகின்றனர்.
கடந்த 17-ம் தேதி சுரேஷ் மற்றும் மதன்குமார் வால்பாறைக்குகாரில் சென்றுள்ளனர். அப்போது நல்லகாத்து எஸ்டேட்டைச் சேர்ந்த டிராவல்ஸ் உரிமையாளர் சதீஷ்குமார்(33) என்பவர் இருவரையும் வழிமறித்து தகராறு செய்துள்ளார்.
பின்னர் தகாத வார்த்தைகளால் பேசி, கட்டையால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். காயமடைந்த இருவரும் வால்பாறை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
இதுகுறித்து சுரேஷ் அளித்த புகாரின் பேரில் வால்பாறை போலீஸார் வழக்குப்பதிவு செய்து, ஹோட்டல் உரிமையாளர்களைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த சதீஷ்குமாரைக் கைது செய்தனர். சதீஷ்குமார், வால்பாறை நகர திமுக இளைஞரணி துணை அமைப்பாளராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.